“50,000 வீரர்கள் குவிப்பு”
வெடிக்கப்போகும் பெரிய மோதல்!
அணுஆயுதம் தொடர்பான டீலுக்கு வராவிட்டால் வரலாறு காணாத வகையில் ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வார்னிங் செய்துள்ளார். மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ராட்சச விமானங்களை குவித்து வருவதோடு, பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை தயார் செய்துள்ளது.
இப்படி இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தான் ஈரானை சுற்றிய 10 ராணுவ தளங்களில் மொத்தம் 50,000 படை வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் மற்ற அதிபர்கள் கூட ஈரான் மீது கொஞ்சம் கருணை காட்டினார்கள். ஆனால் டொனால்ட் டிரம்ப், ஈரானை தொடர்ந்து பதற்றத்தில் வைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு உதாரணம் 2017-2021 வரை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக பதவியேற்றார்.
அப்போது அவர் ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். அதுமட்டுமின்றி கடந்த 2015ம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா போட்ட ஈரான் அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இந்த ஒப்பந்தம் ரத்து செய்தது, பொருளாதார தடைகள் உள்ளிட்டவற்றால் ஈரான் பெரும் பாதிப்பை சந்திக்க தொடங்கியது.
இதனால் அமெரிக்காவை உக்கிரமாக எதிர்த்து வருகிறது ஈரான். அதேபோல் தான் அமெரிக்காவும், ஈரானை சீண்டி வருகிறது. அணுஆயுதம் தயாரிக்கும் ஈரான் இப்போது அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் வந்துவிட்டார். டொனால்ட் டிரம்புக்கும், ஈரானுக்கும் இடையே தனி பிரச்சனை உள்ளது.
டிரம்ப் மீதான கொலை முயற்சியின் பின்னணியில் ஈரான் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. ஒருபுறம் அமெரிக்கா, இன்னொரு புறம் அமெரிக்காவின் தோழமை நாடான இஸ்ரேல் என 2 நாடுகளை சமாளிக்க அணுஆயுதம் வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரான் அந்த பணியை தீவிரமாக்கி உள்ளது.
இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் தங்கள் நாடு மட்டுமின்றி இஸ்ரேல் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று அமெரிக்கா நினைக்கிறது.
இதனால் டொனால்ட் டிரம்ப் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை எதிர்த்து வருகிறது. அதனை முடக்க அமெரிக்கா நினைக்கிறது.
ஒப்பந்தத்துக்கு அழைக்கும் அமெரிக்கா இதற்கிடையே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணுசக்தி திட்டத்தின் மூலம் அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்பது தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் ஈரானின் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் ஈரான் தரப்போ, ‛‛அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் உடன்படமாட்டோம். அமெரிக்கா சொல்வதையெல்லாம் கேட்க முடியாது” என்று அறிவித்து விட்டது.
இதனால் கண்சிவந்த டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தயார் நிலையில் போர் விமானம்-ஏவுகணை அதுமட்டுமின்றி ஈரானை தாக்கும் வகையில் B 2 Bombers என்ற போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா எனும் பவளத்தீவில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்கா குவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவ தளங்களை நோக்கி ஏவுகணைகளை தயார் நிலையில் திருப்பி வைத்துள்ளது. தற்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானை சுற்றிய 10 ராணுவ தளங்களில் அமெரிக்கா படை வீரர்களை குவித்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா உடனான அணுசக்தி திட்டத்துக்கு ஈரானை பணிய வைக்கும் இந்த நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 50,000 வீரர்கள் குவிப்பு இதுதொடர்பாக ஈரான் ராணுவத்தின் விமானப்படை பிரிவின் கமாண்டரான பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜ்ஜாதி கூறுகையில்,
‛‛அமெரிக்கா 10 ராணுவ தளங்களை இந்த பிராந்தியத்தில் வைத்துள்ளது. குறிப்பாக ஈரானை சுற்றி அந்த தளங்கள் உள்ளன. அங்கு 50 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை எனது கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறிவது போன்றதாகும். .
இது அமெரிக்காவுக்கு தான் பிரச்சனையாகும்” என்று வார்னிங் செய்துள்ளார்.
இதனால் நாளுக்கு நாள் ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் – காசா போர், அமெரிக்கா – ஏமன் நாட்டின் ஹவுதிகள் இடையேயான மோதல் உள்ளிட்டவற்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த நடவடிக்கைகள் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டம் எதற்கு? இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அமெரிக்கா ஏன் மோதல் போக்கு உள்ள ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட துடிக்கிறது என்ற சந்தேகம் வரலாம்.
இதற்கு விடை என்னவென்றால் தற்போது 9 நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளது. அதன்படி அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளது. மற்ற நாடுகளிடம் அணுஆயுதம் என்பது இல்லை.
அந்த நாடுகள் தயாரிக்கவும் அனுமதி என்பது இல்லை. அதாவது ஐநாவின் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின்படி புதிதாக எந்த நாடுகளும் அணுஆயுதம் தயாரிக்க அனுமதியில்லை. இந்த தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.
இதனால் அந்த நாடு அணுஆயுதம் தயாரிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு முன்பு வடகொரியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனாலும் அமெரிக்கா உடனான மோதலால் அந்த நாடு தங்களின் பாதுகாப்புக்கு அணுஆயுதம் தயாரித்ததோடு,
அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இப்போது அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா உள்ளது. இப்படியான சூழலில் ஈரானும் அணுஆயுதம் தயாரித்தால் அமெரிக்காவுக்கு பிரச்சனை என்பது ஏற்படும். இதனால் அமெரிக்கா எதிர்த்து வருகிறது.
ஆனாலும் ஈரான் அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்கிறது. அமெரிக்கா-ஈரான் ஒப்பந்த பின்னணி இந்த அணுசக்தி திட்டத்தின் வாயிலாக அணுஆயுதம் தயாரிக்க முடியும். இதனால் அணுசக்தி திட்டத்தின் மூலம் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இத்தகைய ஒப்பந்தம் என்பது ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டில் நடந்தது. அப்போது அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தார்.
டிரம்பின் மிரட்டலுக்கு சத்தமின்றி ஈரான் கொடுக்கும் பதிலடி அப்போது ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் அணுஆயுதம் தயாரிக்காது எனவும், ஈரான் மீதான சில பொருளாதார தடைகளை விலக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது.
ஆனால் அதன்பிறகு அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் ஈரான் இடையேயான அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார். பொருளாதார தடைகளை விதித்தார். இதனால் கோபமான ஈரான் நடப்பது நடக்கட்டும். நாம் அணுஆயுதம் தயாரிப்போம் என்று முடிவு செய்து அந்த பாதையில் செல்கிறது.
இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் ஈரானை மீண்டும் அமெரிக்காவுடன் அணுசக்தி திட்ட ஒப்பந்தம் மேற்கொண்டு அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதியை வழங்க வலியுறுத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.