ஈராக் அதிபராக குர்தீஷ் இன அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு

ஈராக் அதிபராக குர்தீஷ் இன தலைவர் அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக் அதிபராக அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு

மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் ஈராக் அதிபரை தேர்வு செய்வது தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ரஷீத் ஈராக் அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Story

ஹாரிபாட்டர் பட நடிகர் மறைவு

Next Story

இது தேர்தல் நடத்த நேரமல்ல!