ரஷ்யர்களை வெளியேற்றிய புதினால் பரபரப்பு.!
இஸ்ரேலில் உள்ள ரஷ்யாவின் தூதரகத்தில் உள்ள ஊழியர்களை குடும்பத்துடன் அந்த நாட்டின் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 விமானங்களில் அவர்கள் அனைவரும் ரஷ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குல் நடத்த உள்ளதா? என்ற பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உறவு உள்ளது. ஆனாலும் நம் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு போன்று அது கிடையாது. இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவு நாடாகும். மறுபுறம் ஈரான், ரஷ்யாவின் நட்பு நாடாக உள்ளது. ஆனால் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மோதல் உள்ளது.

இதனால் இஸ்ரேல் – ரஷ்யா இடையே உறவு இருந்தாலும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இருப்பினும் இருநாடுகளிலும் தூதரகங்கள் உள்ளன. இந்நிலையில் தான் தற்போது பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது இஸ்ரேலில் உள்ள ரஷ்யாவின் தூதரகங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ரஷ்யாவின் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மொத்தம் 3 விமானங்களில் அவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா திடீரென்று தனது தூதரக ஊழியர்களை குடும்பத்துடன் அழைத்து சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் இஸ்ரேல் மீது யாராவது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இதனால் தான் இஸ்ரேலில் இருந்து ரஷ்யா தனது தூதரக ஊழியர்களை வெளியேற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மீது தற்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் அது ஈரானால் மட்டும் தான் முடியும். ஈரானும், ரஷ்யாவும் நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது ஈரானில் உள்நாட்டு பிரச்சனை நடந்து வருகிறது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரானின் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் அந்த நாட்டின் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை அந்த நாட்டின் படைகள் கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது வரை 20க்கும் மேலான போராட்டக்காரர்கள் ஈரான் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாளுக்கு நாள் வலுத்து செல்கிறது. தலைநகர் டெஹ்ரானில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் 220 இடங்களில் நடந்து வருகிறது. 1000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவை கூட்டத்தில், ‛‛ஈரானில் நடக்கும் போராட்டம் அங்கு வசிக்கும் 92 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மக்களுக்கு திருப்பு முனையாக இருக்கும். இஸ்ரேல் நாடும், அரசும், நானும் ஈரான் மக்களின் போராட்டம், சுதந்திரம், விடுதலை உள்ளிட்டவற்றின் அடையாளமாக இருக்கிறோம்” என்றார்.
இது ஈரானை கோபப்படுத்தியது. மேலும் போராட்டத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுத்துறை இருக்கலாம் என்ற சந்தேகம் ஈரானுக்கு வந்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும் ஈரான், இஸ்ரேலை தாக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது தூதரக ஊழியர்களை குடும்பத்துடன் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தான் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இருந்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒரு செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, எந்த காரணம் கொண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் இல்லை என்று நெதன்யாகு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றத்தால் ரஷ்ய அதிபர் புதின் தனது நாட்டு மக்களை பாதுகாப்பும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.





