இவர்தான் நிதிக் காப்பாளர்!

-நஜீப்-

காமினி லொகுகே வங்கிகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பான குழுவுக்குத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். துறைக்கு நிபுணத்துவம் உள்ள பலர் இருக்க அது பற்றிய அரிச்சுவடியே புரியாத இவருக்குத் தலைமை பதவி! இதுதான் நம்ம நாட்டு அரசியல்.

இவர் தொடர்பாக நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. அதன்படி இவர் 1998ல்  தனது பெயரில் பல மாற்றங்களைச் செய்து 212 இலட்சம் ரூபா மக்கள் வங்கியில் கடன் வாங்கி 13 வருடங்களுக்கு மேல் அதனை செலுத்தாது ஏமாற்றி வந்திருக்கின்றார்.

இது பற்றி பாத்திரிகையாளர் சிரிலால் பிரியந்த அப்போது லக்பிம பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கின்றார். இது மிகவும் பிழையான தகவல் என்று  குறிப்பிட்டு லொகுகே தனக்கு 15 கோடி நஷ;டஈடு கோரி சட்டதரணி ஊடக கட்டுரை எழுதியவருக்கு கடிதமும் அனுப்பி இருக்கின்றார்.

ஆனால் கட்டுரையாளர் பின்வாங்கவில்லை. அவர் தனக்கு வந்த இந்தக் கடிதம் தொடர்பாக மீண்டும் அதே பத்திரிகையில் கட்டுரை எழுதி இருந்தார். பின்னர் காமினிக்கு இதிலிருந்து தப்ப முடியாது என்ற நிலையில் வங்கிக்கு அந்தப் பணத்தை செலுத்த வேண்டி வந்தது.

இது ஆர்.பிரேமதாச ஜனாதிபதி அதிகாரத்தை வைத்து லெகுகே அன்று பார்த்த வேலை இது. இவர்தான் இன்று வங்கிக்கும் நிதி நடவடிக்கைக்கும் பொறுப்பான குழுவுக்குத் தலைவராம்.!

நன்றி: 26.03.2023 ஞாயிறு தினக்குரல்

 

 

Previous Story

சவுதி பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

Next Story

மனித உரிமைக்கு IMF வேட்டு!