இலட்சம் வேட்பாளர் படை!

-நஜீப்-

நாம் பார்த்த கணிப்புக்களின் படி இந்தத் தேர்தலில் ஒரு இலட்சம் வரையிலான வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் 18 வட்டராங்கள் என்றால் பட்டியலில் மேலும் 15 பேர் இருப்பார்கள்.

பொதுவாக கட்சிகளும் சுயேட்சைகள் என்று சராசரியாக அங்கு 10 அணிகள் வரை போட்டி என்றால் அந்த உள்ளாட்சி சபைக்கான மொத்த வேட்பாளர் எண்ணிக்கை 330.

ஒரு உள்ளாட்சி சபைக்கு இந்த எண்ணிக்கை என்றால் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 112200  வேட்பாளர்கள். இங்கு நாம் ஒரு சராசாரி சபையை வைத்துத்தான் இந்தக் கணக்கை செய்திருக்கின்றோம்.

ஆனால் இதனை விட அதிகமான எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற சபைகளும் இருப்பதால் எமது கணிப்பு துல்லியமானதாக இருக்க அதிக வாய்ப்புக்கள்.

எனவே தேர்தலை தள்ளிப் போடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக மிகப் பெரிய படையாணி ஒன்று தெருவுக்கு வர இடமிருக்கின்றது. ஆளும் தரப்பு ஆதரவு கட்சி வேட்பாளர்களைத் தவிர்த்து பார்த்தாலும் இந்தப் படையாணி மிகவும் பெரியது.

நன்றி: 29.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நவீன துரோகங்கள்!

Next Story

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாய்ப்புக்கள் மிகவும் கம்மி?