இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா!

பிரதமர் டலஸ் அலகப்பெருமா!

கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கயைில் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே விடம் அளித்தார்.

நமது பக்கத்து நாடான இலங்கை கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. பெட்ரோல் விலை உயர்வு. மின் தடை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை குழப்ப நிலை நீடித்து வந்தது.

தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா பொருள் மற்றும் பண ரீதியாக பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளது. இருப்பினும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

இதனிடையே இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷே தன் பதவியை ராஜினாமா செய்தார் ராஜினாமா கடித்ததை அவர் கோத்தபய ராஜபக்ஷே விற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் அவர் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை அரசில் அங்கம் வகித்து வந்த சுதந்தர கட்சியின் 14 எம்.பிக்கள் இலங்கை அரசில் இருந்து விலகிகொள்வதாக கடிதம் அளித்துள்ளனர். ஒரு வார காலத்திற்குள் காபந்து அரசு அமைக்க வேண்டும் என இலங்கை அதிபருக்கு அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்

பிரதமர் டலஸ் அலகப்பெருமா!

பிரதமர் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டால் அந்த இடத்துக்கு தற்போதய ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெருமா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. அவர் ஒரு நிதானமானவர். ஊழல் குற்றச்சாட்டுப் பற்றி அவருக்கு எதிரான முறைப்பாடுகள் நாம் அறிந்த வரை கிடையாது. என்றாலும் தற்போதய நெருக்கடிக்குத் தலையணையை மாற்றி பரிகாரம் தேடும் ஒரு வேலை என்றுதான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

இராஜினாமச் செய்ய

வேண்டியது ஜனாதிபதி!

இராஜினாமச் செய்ய வேண்டியது பிரதமர் அல்ல ஜனாதிபதிதான் என்பது நமது கருத்து.  அரசை இராணுவ மயமாக்கியது. தனது அரசியல் அறியமை காரணமாக பிழையான வழியில் அரசை முன்னெடுத்துச் சென்றது. கிரிமினல் குற்றவாளிகளை நிரபராதிகளாக்கி விடுதலை செய்தமை. பேரினத்து ஜனாதிபதியாக தன்னை காட்டிக் கொள்ள முயன்றது. ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை வழங்குவதை தவிர்த்து வந்தது. சர்வதேசத்துடன் முறுகல் போக்கை கையான்டது. போன்ற பல தவறுகளுக்கு ஜனாதிபதிதான் முக்கிய காரணம் என்றுதான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

Previous Story

கோட்டாபயவின் பிரசார பாடலை எழுதியவர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்!

Next Story

மீண்டும் 'அரிசி' அரசியலும்!