இலங்கையில் வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் (Gotabaya Rajapaksa) பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (05-04-2022) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பல ஆண்டுகளாக மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மக்களின் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் போராடிய போதும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏப்ரல் 1 ஆம் திகதி இந்த அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய தினம் கோட்டாபயவினால் வெளியிட்டப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில், ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் திரும்பப் பெறப்படும் என கூறினார்.

 

Previous Story

கோட்டா அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.!

Next Story

கல்முனை ஹரீஸ் MP அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!