இலங்கையில் பாணின் விலை 400 ரூபா!

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது.

அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேவேளை பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. .

இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை 300, 400 ரூபாவுக்குக் கூட வாங்க முடியாது எனவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Story

பிரேசில் வெள்ளம், சரிவு 127 பேர் பலி

Next Story

தகவல் தந்தால் 25 லட்சம்  பரிசு!