இலங்கையில் நகர மயமாக்கள்!

-நஜீப்-

இலங்கையின் நகர மயமாக்கள் தொடர்பான புதிய சில தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதன் படி இது 44.57 சதவீதமாக இப்போது அதிகரித்திருப்பதாக தெரிய வருகின்றது. 2012 கணிப்புப் படி இது 18.2 சதவீதமாக இருந்தது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் இது 97 சதவீதமாக இருக்க, அதேநேரம் மிகவும் குறைவான நகர மயமாக்களைக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு இருக்கின்றது. நாட்டிலுள்ள 276 பிரதேச செயலகங்களில் 12773 கிரம சேவகர் பிரிவுகள் இருக்கின்றன. இதில் 3025 கிராம சேவகர் பிரிவுகள் நகர் புறங்களில் அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

THE IMPACT OF 'COLOMBO CITY CENTRE' AND 'MARINO MALL' | LMD

கம்பஹ மாவட்டத்தில் 77 சதவீதமும், யாழ்ப்பணத்தில் இது 67 சதவீதமாகவும் இப்போது வளர்ச்சியடைந்திருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 சதவீதமாகவும் இது இருக்கின்றது. பிரதேசம் அமைந்திருக்கின்ற இடத்திலிருந்து பத்து கிலோ மீற்றர்கள் தூரத்திலுள்ள வசதி வாய்ப்புக்களை வைத்துத்தான் இந்தக் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று தெரிகின்றது.

தற்போது நமது நாட்டில் மக்கள் தொகை 2 கோடி 23 இலட்சம். இதில் 67 இலட்சம் பேர் நகர்ப்புறவாசிகள் என்பது இப்போது கணிக்கப்பட்டுள்ளது.

நன்றி: 22.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

புத்தரைத் தேடித் தாருங்கள்!

Next Story

"தேர்தலுக்கு அஞ்சுவோரும் கெஞ்சுவோரும்"