” இலங்கையின் மூத்த சகோதரர் இந்தியா ” – நமல் 

இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவி குறித்து முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே, பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

India, Big Brother, Sri Lanka, Namal Rajapaksa, Thanks, Humanitarian Aid, இந்தியா, மூத்த சகோதரர், இலங்கை, நமல் ராஜபக்சே

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின், 90 லட்சம் கிலோ அரிசி, 20 ஆயிரம் கிலோ பால் பவுடர், 25 ஆயிரம் கிலோ மருந்துகள் மற்றும் இதர மருத்துவப் பொருட்களுடன் சென்ற கப்பல், நேற்று கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.
latest tamil news

இந்தியாவின் சார்பில் அளிக்கப்படும் உதவிகள் குறித்து முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே தெரிவித்ததாவது: இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருகிறது. இதை எங்களால் மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“இதற்கு முன்னர் சீனாதான் நமக்கு உயிர் நண்பன் என்று சொன்னார்கள். அது பற்றி விமர்சனங்கள் வந்த போது, இந்தியா நல்ல நண்பர். இப்போது மூத்த சகோதாரன். இவை எல்லாம் ஐஸ் வைக்கின்ற கதைகள். மூத்த சகோதரர்ன் என்றுதான் வைத்துக் கொள்வோம். அவர்கள் எந்த நாளும் நமக்குச் சோறு போடுவார்கள் என்று மட்டும் எதிர்பார்க்க வேண்டாம். “

Previous Story

அருந்திக்க பர்ணாந்துவை காணவில்லை!

Next Story

WHO-ன் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருது: யார் இந்த ஆஷாக்கள் !