இலங்கையின் புதிய பிரதமர் யார்:- பசில் விளக்கம்.

 இலங்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா? விலக மாட்டாரா? என்ற செய்திகளே அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமராகப் பதவியேற்று மூக்குடை படப்போவது யார் என்ற நிலை தான் தற்போது நாட்டில் காணப்படுகின்றது. இதனைத் தான் ஏழு தலையார் கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. சஜித்தும் பதவியை நிராகரிக்கின்றார். ஜேவிபி.யும் தற்காலிக, இடைக்கால அல்லது சர்வகட்சி அரசு விடயத்தில் ஆர்வமில்லாது இருக்கின்றது.

ஆனால் ரணில் மட்டும் ஆள்வைத்து தான் தயார்.. தயார்…. என்று கூவி ஊடகங்களில் பரப்புரை பண்ணிக் கொண்டிருந்தாலும் எவரும் அவர் பெயரை சிபார்சு செய்யத் தயாராக இல்லை.  உறவினர் ருவன் விஜேவர்தன மட்டும்தான் அவருக்காகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.

பொதுத் தேர்தல் ஒன்றால் மட்டுமே பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியும். தேர்தல் நடத்தக் காசு உண்டோ இல்லையோ வேறு முயற்ச்சிகளைச் செய்து காலத்தைக் கடத்தாது உள்ள யதார்த்தமான தீர்வு இதுதான்.

தேர்தலுக்கு 1600 கேடி ரூபா வரை தேவை. சீனி, தேங்காய் எண்ணை கொள்ளையர்களிடம் இதனை விட பொது மக்கள் பணம் எத்தனையோ மடங்கு இருக்கின்றதே. அபிவிருத்தி பணிகளில் வாங்கிய கமிஷனும் கைநிறைய இருக்கின்றதே, அதிலிருந்தாவது தேர்தலை நடத்தி நெருக்கடியைத் தீர்க்க முடியும் அல்லவா?

Previous Story

முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஏன் ஈத் பண்டிகை கொண்டாடுவதில்லை?

Next Story

ராஜபக்சாக்கள் பற்றிய கருத்துக் கணிப்பு!