இலங்கைக்கு ஆதரவளிக்க மாலைதீவு தீர்மானம் !

இலங்கை-மாத்தளை மாவட்டக் குடித்தொகைக்கு சமனான மக்கள் வாழ்கின்ற (540000) நாடுதான் மாலைதீவு. மொத்த நிலப்பரப்பு வெரும் 300 சதுரக்கிலோ மீற்றர்கள் மட்டுமே. இந்த நாடு எமக்கு உதவ வருவது மதிக்கத்தக்கது.

ஆனால் நமது யானைப் பசிக்கு அந்த உதவிகள் சோளப் பெரியாகக்கூட இல்லை. ஆனால் ஊடகங்களிடம் மாலைதீவுடன் உதவிகள் பற்றி ரணில் பேசி இருக்கின்றார்.  இது பற்றி என்னதான் செல்வது என்று தெரியவில்லை.

இதற்கு முன்னர்  தமிழக யாசகர் ஒருவரும் சீன முன்பள்ளி மாணவர்களும் நமது பஞ்சத்துக்குப் பணம் உதவி செய்திருந்ததும் தெரிந்ததே. மாலைதீவு எவ்வளவுதான் நமக்குத் தர முடியும்-உதவ முடியும் சிந்தித்துப் பாருங்கள்.

இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, முயற்சிக்கும் வேளையில், தமது நாடு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று மாலைதீவு உறுதியளித்துள்ளது.

மாலைதீவு, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் கூறியுள்ளளார்.

இந்தநிலையில் இலங்கைக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் மாலைதீவு நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நஷீத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் ரணில் சாதனையா?

Previous Story

உத்தியோகபூர்வ அறிவிப்பு : இலங்கை திவாலானது

Next Story

மகிந்த ராஜபக்சேவை மக்கள் அடித்து கொல்லட்டும்!