இலங்கைக்கு  அமெரிக்கா  கடன் 

இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, 4250 கோடி ரூபாய் கடன் உதவி திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

latest tamil news
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நம் அண்டை நாடான இலங்கைக்கு பல்வேறு கடன் உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. இந்த வகையில், பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி தொகையை அமெரிக்கா அறிவித்து உள்ளது.
latest tamil news

அந்நாட்டை சேர்ந்த சர்வதேச நிதி மேம்பாட்டு கழகம் இந்த கடன் தொகையை அளிக்க உள்ளது. இலங்கைக்கான அமெரிக்க துாதர் ஜூலி சங் இந்த தகவலை உறுதி செய்தார். சரியான நேரத்தில் உதவிடும் அமெரிக்காவுக்கு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்தார்.

இதனை விட எத்தனையோ மடங்கு இந்தியாவும் சீனாவும் ஏதோ வகையில் இலங்கைக்குக் கடன்களை கொடுத்தும் நாடு கரை சேரவில்லை. எதோ வழிகளில் வருகின்ற பணத்தில் எவ்வளவு கொள்ளயடிக்கலாம் என்பதுதான் இலங்கை அரசியல் வாதிகளின் இலக்காக இருப்பதால் இந்த அவல நிலை

Previous Story

ஆப்:சாலையோரம் சமோசா விற்கும் டி.வி. ஆங்கர்

Next Story

டலஸ் அணியில் 45 பேராம்!