இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்குள் இந்தியாவின் இறையான்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியா தனது பலத்தை நிரூபிக்க 10 றோ அதிகாரிகளை வடமாகாணத்தில் களமிறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Anura Kumara openly challenges Sajith for a debate

அதாவது இந்தியா தனக்கு சாதகமான வேட்பாளரை மிக துள்ளியமாக ஆராய்ந்து இறுதிக்கட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவினை வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் ஜே.வி.பிக்கான ஆதரவு படலத்தை எஞ்சியுள்ள இரண்டு தினங்களில் உடைக்க தீவிரமாக மூன்று தளபதிகளை களத்தில் இறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

A Brief Introduction to RAW: The Foreign Intelligence Agency of India - The Maldives Journal

இந்த பின்னணியில் 20 ஆம் திகதி முக்கிய பாய்ச்சல் நடவடிக்கையொன்றினை ரணில் விக்ரமசிங்க நகர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் களநிலவரம் தொடர்பில் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நிலாம்தீனின் இந்தத் தகவல்கள் உண்மையாக இருந்தால் இது இலங்கை அரசியலில் இந்தியாவின் நேரடித் தலையீடாக அமையும்.

அனுரவுக்கு வாய்ப்பான தேர்தல் களத்தை இந்தியா மாற்றி விடுமாக இருந்தால் இது தெற்கே சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணும்.

அத்துடன் பொதுவாகவே இந்திய தொடர்பில் என்றுமே சிங்கள மக்களுக்கு நல்லலெண்ணம் கிடையாது.

அப்படியான பின்னணியில் இந்தியாவின் இந்த செயல் தெற்கு சிங்கள மக்களை மேலும் சீனா பக்கம் தள்ளிவிடுக்கின்ற ஒரு செயலாகவும் இது அமையும்.

Previous Story

அனுபவம் பற்றிய முட்டால்கள் கதை

Next Story

புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்!