இறப்பராகும் தீர்வுக் கதை!

நஜீப்

சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு. இன்னும் 43 நாட்கள் வரைதான் எஞ்சி இருக்கின்றது. இதனைக் குழப்பியடிப்பதற்கு அரச தரப்பிலிருந்தே தற்போது அம்புகள் ஏவப்பட்டுக் வருகின்றன. சரத் வீரசேக்கர வழக்கம் போல இதற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுக் வருகின்றார்.

இந்த முறை பேரினத்தவர்கள் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. செல்வாக்கான பௌத்த தேரர்கள் மௌனித்து நிற்க்கின்றார். பௌத்த மக்களின் விடுதலை வீரன் ஞானம் இருக்கும் இடம் இந்த நாட்களில் எவருக்கும் தெரியவில்லை. இதனால் அவரது குரலை கோட்க முடியவில்லை.

அடுத்தவர்களும் இது எங்கே நடக்கின்ற காரியமா என்ன என இந்தப் பேச்சு வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. நேர்வே சேல்ஹெய்மும் இந்த இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது. நான் அதில் எந்தப் பங்கும் வகிக்க வில்லை.

நான் இலங்கையில் சூழல் விடயங்கள் பற்றித்தான் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். எனவே என்னை இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி முடிச்சுப் போடாதீர்கள் என்று சொல்லி விட்டார். எப்படியும் தீர்வுக் கதை ரப்பர்தான்.

நன்றி: 25.12.2023 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

ஐஸ் போதை: இப்படியும் நடக்கலாம்!

Next Story

ஒரு MPக்கு 128 மதுபான நிலையங்கள்