இரானிடம் அணுகுண்டை தயாரிக்கும் திறன் உள்ளது

இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரை மேற்கோள்காட்டி இரானிய செய்தி முகமையான ஃபார்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் இரானின் அதிஉயர் மத குருவின் ஆலோசகரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். இரானில் இதுபோன்ற நுட்பமான தகவல்களை உயர்நிலையில் இருப்பவர்கள் பொதுவெளியில் வெளியிடுவதில்லை.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பிறகு இரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியது. எனினும், இரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கத்திற்காகவே என்று தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால், இரானின் இந்தக் கூற்றை மேற்கு நாடுகள் ஏற்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான காலம் மெல்ல, மெல்ல கடந்து கொண்டிருப்பதாக அவை கூறுகின்றன.

இரானின் அணுசக்தி திட்டம் திரும்பபெறப்படும் நிலையை அடையக்கூடாது என்று அந்நாட்டின் அணுசக்தி முகமையின் தலைவர் மொஹம்மத் எஸ்லாமி கூறுகிறார்.

இவரது இந்த கருத்து, சமீபத்தில் இரானின் அதி உயர் தலைவர் தலைவரின் ஆலோசகர் கமால் கராசியின் கூற்றை மீண்டும் வலியுறுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.

Previous Story

நாடு திரும்பும் கோட்டா பலத்த பாதுகாப்பு

Next Story

'புரட்சி'