இராணுவ பாதுகாப்பை விட          JVP பாதுகாப்பு பலமானது

இராணுவ பயிற்சியில் கிடைக்கும் பாதுகாப்பை விட மக்கள் விடுதலை முன்னணியின் தோழர்கள் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு பலமானது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இலக்கு வைத்து நேற்று நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் குறித்து முன்னணியில் தலைமையத்தில் இன்று ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதன் காரணமாக நேற்று நடத்த வன்முறை தாக்குதலை தடுக்க முடிந்தது. மக்கள் விடுதலை முன்னணியை மக்களே பாதுகாக்கின்றனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு உண்மைகள் தெரியும். தாக்குதலின் பின்னணியில் இருக்கும் நபர் யார் என்பதை தாக்குதலை நடத்திய நபர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டின் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தாக்குதல் நடத்திய நபர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்காக தமது 5 ஆயிரம் ரூபாய் தருவதாக அதனை செய்ய சொன்னவர்கள் கூறியதாகவும் 16 பேர் இந்த தாக்குதலை நடத்த வந்திருந்ததாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

Previous Story

'ஆளைத்' துரத்துங்கள்!

Next Story

சீனாவின் கைக்கூலிகளே அதிகாரத்தில்- அனுரகுமார