/

இராஜதந்திர பலம் பலயீனம்!

-நஜீப்-

இலங்கை அரசியலில் அநீதி, ஊழல், மோசடி, கொள்ளை கமிஷ், கப்பம், என்று அனைத்து அட்டகாசங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நாடுகளையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் காரியம் சாதிக்கின்ற விடயத்தில் இந்தியாவை விட இலங்கை பல படிகள் முன்னணியில் இருக்கின்றது என்று இந்திய ஊடகங்களிலே செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சீனாவை காட்டி புடுங்க வேண்டியதை இந்தியாவிடம் இருந்து இலங்கை தனக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் வாங்கிக் கொள்கின்றது. அதேபோன்று சர்வதேச விவகாரங்களில் ஒரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை  ஜெனீவா விவகாரத்திலும் சர்வதேசத்தை ஏமாற்றி காரியம் சாதித்துக் கொண்டு வருகின்றது.

தற்போதய இலங்கை ஜனாதிபதி ரணில் மேற்கத்திய ஆதரவுப் போக்குடையவர் என்ற ஒரு கருத்து இருந்தாலும் இந்த 51 வது ஐ.நா.ஜெனீவா அமர்வின் போது மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எதிராகவே தனது வக்குகளை இந்த மனித உரிமைகள் அமைப்பில் பதிந்திருக்கின்றன.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் அவற்றின் கூட்டாளிகளுமே இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. அங்கு என்ன தீர்மானம் போட்டாலும் இலங்கை அதனை கண்டு கொள்ளாது.

நன்றி: 18.09.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

மனித உரிமைகள் பேரவை: அலி சப்ரியின் பங்கு - சாணக்கியன் கேள்வி

Next Story

அரசியல்வாதிகளை நிராகரிக்கும் பிரச்சார முழக்கத்திற்கு மஹிந்த தேசப்பிரிய கடும் எதிர்ப்பு