இம்ரான் கான் மீதே பழிபோட்ட  மனைவி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சரமாரி புகார் வைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அங்கு சமூக போராளியாகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார். அரசுக்கு எதிராக அடிக்கடி பல்வேறு புகார்களை இவர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

முக்கியமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறித்து பல்வேறு கட்டுரைகளை, விமர்சனங்களை ரேஹம் கான் எழுதி உள்ளார்.

இம்ரான் கான் மனைவி

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் இவர் பிரிட்டிஷ் நாட்டிலும் குடியுரிமை கொண்டவர் ஆவார். அதேபோல் பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் ஒன்றிலும் ரேஹம் கான் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். “ரேஹம் கான் மெமொய்ர்” என்ற பெயரில் இவர் எழுதிய புத்தகத்தில் கூட இம்ரான் கான் மீது கடும் விமர்சனங்களை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் மீது தாக்குதல்

இந்த நிலையில்தான் இஸ்லாமாபாத்தில் தனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரேஹம் கான் புகார் வைத்துள்ளார் . தனது உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு இவர் திரும்பி வரும் போது பைக்கில் வந்த சிலர் ரேஹம் கான் காரை வழி மறித்து நிறுத்தி உள்ளனர். பின்னர் காரில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ரேஹம் கான்

கார் உள்ளே அவர் இருப்பார் என்று நினைத்து தாக்கி உள்ளனர். இது பற்றி ரேஹம் கான் கூறுகையில், அதோடு காரில் இருந்தவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளனர். ஆனால் நான் முன் கூட்டியே காரில் இருந்து வேறு காருக்கு மாறிவிட்டதால் எனக்கு எதுவும் நடக்கவில்லை.

தப்பித்தேன்

நான் தப்பித்துவிட்டேன். இதுதான் இம்ரான் கானின் பாகிஸ்தானா? இதுதான் புதிய பாகிஸ்தானா பயந்தவர்களும், ரவுடிகளும், பேராசை கொண்டவர்களும் வாழும் நாடாக இது மாறிவிட்டது. நான் ஒரு சாதாரண பாகிஸ்தான் பெண்ணாக சாக விரும்புகிறேன்.

ரேஹம் vs இம்ரான்

இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. என்னை சாலையில் தாக்கி கொல்வீர்களா அல்லது குறி வைத்து கோழைத்தனமாக தாக்குவீர்களோ தெரியாது.. நான் எப்படி இருந்தாலும் அதற்கு இந்த கோழைத்தனமான அரசுதான் காரணமாக இருக்கும் என்று இம்ரான் கான் அரசு மீது அவரின் மனைவி ரேஹம் கான் சரமாரி புகார் வைத்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Previous Story

விராட் கோலி சவால்கள் ?

Next Story

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு!