இன்றும் கோட்டாவே ஜனாதிபதி…! மஹிந்த அதிரடி!

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒன்றிணைந்து நிற்போம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சமகால அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்தோம். ஜனாதிபதி கோட்டாபயவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம், இந்த நாட்டை வழிநடத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது பின்னால் இருந்த ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என கூறியதன் பின்னர் மகிந்த சுதாரித்துக் கொண்டார். அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் செய்யும் வேலைத்திட்டம் என மாற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Default thumbnail
Previous Story

22வது திருத்தத்துக்கு ஆப்பு!

Next Story

ரொசெட்டா ஸ்டோன்: சித்திர எழுத்துமுறை  அரேபியர்கள் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டதா?