இந்தோனேஷிய அரசில் 109 பேர் அமைச்சர்கள்

இந்தோனேஷியாவில், அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமையில் பதவி ஏற்றுள்ள புதிய அமைச்சரவையில், 109 பேர் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். 1966க்கு பின் அமைந்துள்ள மிகப்பெரிய அமைச்சரவை என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
Prabowo Subianto waves after the elections commission confirmed he won last month's election.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் எட்டாவது அதிபராக, பிரபோவோ சுபியாண்டோ நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

இவரது அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், தேசிய நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோரை நேற்று முன்தினம் அவர் அறிவித்தார்.

‘ரெட் அண்ட் ஒயிட் கேபினட்’

இந்தோனேஷிய தேசிய கொடியில் இடம்பெற்றுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தை குறிக்கும் வகையில், இவரது புதிய அமைச்சரவைக்கு, ‘ரெட் அண்டு ஒயிட் கேபினட்’ என, அவர் பெயரிட்டார்.

தேர்தலில், சுபியாண்டோவை ஆதரித்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தோனேஷியா அதிபராக பதவியேற்றார் சுபியாண்டோ

 இந்தோனேஷியா அதிபராக பதவியேற்றார் சுபியாண்டோ

முன்னாள் அதிபர் விடோடோவின் மகன் ஜிப்ரான் ரகபுமிங் ரகா துணை அதிபராக பொறுப்பேற்றார்.

விடோடாவின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த 50 சதவீதம் பேருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் நீண்ட நாள் நிதியமைச்சராக பதவி வகித்து வரும் ஸ்ரீ முல்யானி இந்திரவதி, 62, மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

சுபியாண்டோவின் அமைச்சரவையில் 109 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இதற்கு முன், அதிபர் சுகர்னோ தலைமையில் 1966ல் பொறுப்பேற்ற அமைச்சரவையில் 132 அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர்.

பெரிய அமைச்சரவை

அதன் பின், மிகப் பெரிய அமைச்சரவை என்ற பெருமையை சுபியாண்டோ அரசு பெற்றுள்ளது. இதற்கு முன் அதிபராக இருந்த விடோடோ அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்றனர். அங்கு மக்கள் தொகை 28 கோடி

Previous Story

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

Next Story

அமைச்சை நடத்த தனியார் கட்டடம், 66 கோடி ரூபா எங்கே..? சிக்கலில் நடிகை