அத்தனை பேர் முன்பும், அந்த பெண்ணின் ஆடைகள் உருவப்பட்டுள்ளன.. பொது வெளியிலேயே கடுமையாகவும் தாக்கப்பட்டுள்ளார்.. என்ன நடந்தது? இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பாகவே அமைந்து வருகிறது.. பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது..
நல்ல டிரஸ்: நல்ல உடையும் அணிய முடியாமல், விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாமல், விரும்பிய தொழிலையும் செய்ய முடியாமல், விரும்பிய பெண்ணையும் திருமணம் செய்ய முடியாமல், பட்டியலின மக்களின் மோசமான நிலைமை இன்னமும் நிலவி கொண்டிருக்கிறது.
பனஸ்கந்தா என்ற மாவட்டத்தில் பாலன்பூர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த அக்கிரமம் நடந்திருக்கிறது.. அங்குள்ள மோட்டா என்ற கிராமத்தில் ஜிகர் ஷெகாலியா என்ற பட்டிலியனத்தை சேர்ந்த இளைஞர் வசித்து வருகிறார்.. இவர் சம்பவத்தன்று, நல்ல டிரஸ் அணிந்து கொண்டு, சன் கிளாஸ்களையும் அணிந்து கொண்டு வெளியே சென்றுள்ளார்..
டிரஸ்
இதை பார்த்த அங்கிருந்த உயர் சாதியினருக்கு கோபம் வந்து, ஜிகரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். நல்ல டிரஸ் நீ எப்படி போடலாம்? ஏன் கூலிங் கிளாஸ் போட்டே? என்றெல்லாம் கேட்டு அங்கேயே கொடூரமாக தாக்கியதுடன், பால் பண்ணைக்கு பின்பகுதிக்கு தரதரவென இழுத்து சென்றிருக்கிறார்கள்.. ஜிகரை காப்பாற்ற அவரது அம்மா, பின்னாடியே பதறிக்கொண்டு ஓடியுள்ளார்.. அவரையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது.. கொலை மிரட்டலையும் விடுத்துள்ளது..
தாய், மகன் இருவரது ஆடைகளையும் கிழித்துள்ளன. 2 பேருமே இப்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சையில் உள்ளனர். இதோ இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. அதே குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில், கடந்த 28ம் தேதி நடந்துள்ளது. இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. 4 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு தொடர்ந்து ஏற்பட்டு வந்துள்ளது.. இதனால், கடந்த ஒன்றரை வருடங்களாகவே, கணவரையும், நான்கு குழந்தைகளையும் பிரிந்து விட்டார்.. இன்னொரு நபருடன் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்திருந்திருக்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி நிம்மதியாக வாழக்கூடாது என்பதால், அவரை கடத்தி செல்ல முயன்றுள்ளார். இதற்காக துணைக்கு 2 பேரை அழைத்துக் கொண்டு, ராம்புரா கிராமத்துக்கு சென்றார்..
வீட்டுக்குள் புகுந்து மனைவியை கடத்திக் கொண்டு, மார்கலா கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.. சரமாரியாக அந்த பெண்ணின் மீது தாக்குதலையும் நடத்தி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொன்னதாவது: கல்யாணம்: “பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. கணவரையும், 4 குழந்தைகளையும் பிரிந்து, மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள சனாஸ்மாவில் வேறொருவருடன் வசித்து வந்திருக்கிறார்.. அங்கு அவர்கள் 2 பேரும் தினக்கூலியாக வேலை பார்த்துள்ளனர்.. அந்த காதலரின் அம்மா, தம்பதி 2 பேரையும், ராம்புரா கிராமத்தில் ஒரு கல்யாணத்தில் கலந்துகொள்ள அழைத்திருக்கிறார்…
அந்த பெண்ணின் முன்னாள் கணவனையும், திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்… இதுதான் கடைசி.. உங்க கிட்ட பான் கார்டு இருக்கா? உடனே போய் இதை பண்ணுங்க.. வந்தது அறிவிப்பு அப்போதுதான், திருமணத்தில், காதல் ஜோடியை பார்த்து ஆத்திரப்பட்டுள்ளார் கணவர். ராம்புராவுக்கு ஒரு கும்பலுடன் காரில் வந்த முன்னாள் கணவர், அந்தப் பெண்ணையும், அந்த காதலரையும் கடத்திக்கொண்டு மார்கலா கிராமத்திற்குச் போயிருக்கிறார்.
அங்கு பொது இடத்திலேயே வைத்து, அனைவர் முன்பாகவும், பெண்ணின் ஆடைகளை கழற்றி தாக்கியிருக்கிறார்.. இது சம்பந்தமாக 4 பேரை கைது செய்துள்ளோம்.. விசாரணை நடந்து வருகிறது” என்கின்றனர். கொடுமை: பெண்ணின் ஆடையை உருவி தாக்கப்பட்ட சம்பவத்தை, அந்த கிராமத்தை சேர்ந்த நபர், செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டாராம்..
அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி, அதற்கு பிறகே காவல்துறையினர் பார்வைக்கும் எட்டியதாக சொல்கிறார்கள்.. தாலி கட்டிய கணவனே இப்படி அட்டூழியத்தை செய்துள்ளது, அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.