டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை!
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதல்களும், ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலும் வளைகுடா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியிருக்கிறது.
எரிபொருள் தேவைக்கு இந்தியா, இறக்குமதியை நம்பிததான் இருக்கிறது. நமக்கு தேவையான மொத்த எல்பிஜி இறக்குமதியில் சுமார் 40% கத்தாரிலிருந்து வருகிறது.
மொத்த எரிவாயு நுகர்வில் 20% கத்தாரைச் சார்ந்து இருக்கிறோம். இப்படி இருக்கையில், கத்தார் இப்போது இருக்கும் நிலையில், பழையபடி எரிவாயு விநியோகத்தை கொடுக்குமா? என்பது டவுட்தான்.

டிரம்ப் பார்த்த வேண்டாத வேலை
இந்த போருக்கு காரணம் டிரம்ப்தான். ஈரான் தனது கச்சா எண்ணெய்யை, சொந்த கரன்சியில் விற்க தொடங்கியது. எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலரில் இருப்பதால்தான், டாலர் இன்றும் கிங்- ஆக இருக்கிறது.
அப்படி இருக்கையில், அதன் டாலரின் ஆதிக்கத்திற்கு ஈரான் வெடி வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எனவேதான் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
பிரச்சனை என்னவெனில், இந்த போரால் ஏற்படும் பின் விளைவுகளை யோசிக்காமல் அமெரிக்கா கை வைத்துவிட்டது என்பதுதான்.
இந்தியாவுக்கு நெருக்கடி
இது அமெரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதோ இல்லையோ! இந்தியாவுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுக்கான எரிபொருள் இற்குமதி பாதித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆலைகளில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த எல்பிஜி இறக்குமதியில் சுமார் 40% கத்தாரிலிருந்து வருகிறது.
எவ்வளவு காலம் ஆகும்?
இந்த தாக்குதலிலிருந்து கத்தார் மீண்டு வர நீண்ட காலம் எடுக்கும். வெறும் குழாய்கள் மட்டும் பாதிப்பு எனில், அதை சரி செய்ய 4-6 வாரங்கள் வரை ஆகும்.
அதுவே எரிவாயுவை திரவமாக்கும் இயந்திரங்கள் சேதமடைந்திருக்கிறது எனில், அதை சரி செய்ய 3-6 மாதங்கள் வரை ஆகலாம்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி நிபுணர் ஐரா ஜோசப், “2026-ம் ஆண்டின் நடுப்பகுதிக்கு (ஜூன்/ஜூலை) முன்னதாக கத்தார் மீண்டும் முழுமையான சந்தைக்குத் திரும்புவது கடினம்” என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவால் இந்தியாவுக்கு வந்த வினை
எனவே, இந்தியாவுக்கு பெரிய சிக்கல் காத்திருக்கிறது. இந்தியாவின் உரத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிவாயு விநியோகம் ஏற்கனவே 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் ஓரளவு விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளதாகச் சில ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறினாலும், போர்ச் சூழல் நீடித்தால் இந்தத் தட்டுப்பாடு ஆகஸ்ட் 2026 வரை நீடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.




