‘இந்தியாவின் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை’.. இம்ரான் கான் சாடல்!

இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை காண்பித்து இந்தியாவின் தைரியம் தற்போதைய பாகிஸ்தானிடம் இல்லை என சாடியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.

குறிப்பாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நிதியமான ஐ.எம்.ப்பிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயன்றது.

பிரிவினைக்கு காரணமே இந்த நேரு தான்.. பரபரத்த பாஜக! சாவர்க்கரை இழுத்து நறுக் பதிலடி கொடுத்த காங்கிரஸ்

தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம்

ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளதால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது.அடுத்த இலங்கையை போல் விரைவில் மாறிவிடும் எனவும், இத்தகைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு பாகிஸ்தானின் தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து வருகிறார்.

இந்தியாவுக்கு பாராட்டு

இந்தியாவுக்கு பாராட்டு

பாகிஸ்தானின் தற்போதைய அரசை கடுமையாக விமர்சிக்கும் இம்ரான் கான், இந்தியாவை பாராட்டியும் வருகிறார். அந்த வகையில், மீண்டும் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டியுள்ளார். குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் என்ன தவறு உள்ளது என்று பேசிய வீடியோவை வெளியிட்டு, இந்தியா சுதந்திரமான வெளியுறவுக்கொள்கை கொண்ட நாடு என பாராட்டியுள்ளார். அதுவும் லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் பேசியுள்ளார்.

ஷெரீப் அரசாங்கத்தால் முடியவில்லை

ஷெரீப் அரசாங்கத்தால் முடியவில்லை

இந்த பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் கூறியதாவது;- இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்த போதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.

வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்

வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்

அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள்… என கூட்டத்தினர் மத்தியில் பேசிய இம்ரான் கான், ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார். அதன்பிறகும் விடாமல் இந்தியாவை புகழ்ந்து பேசிய இம்ரான் கான், அமெரிக்காவிடம் இதை சொல்ல நீங்கள் யார்? என்று கேட்ட ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. மக்களுக்கு தேவைப்படுவதால் நாங்கள் எண்ணெய் வாங்குகிறோம். சுதந்திர நாடு என்றால் இதுதான்.” என்றார்.

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல்

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல்

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து விட்ட்டதகா பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசை கடுமையாக விமர்சித்த இம்ரான் கான், “நான் ஆட்சியில் இருந்த போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவது பற்றி அந்நாட்டிடம் பேசினேன். ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு இந்த துணிச்சல் இல்லை. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் எதிர்க்க ஷெபாஸ் ஷெரீப் அரசால் முடியவில்லை. எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவில் உள்ளது. மக்கள் வறுமை கோட்டிற்கும் கீழ் தவிக்கின்றனர். நான் அடிமைத்தனத்திற்கு எதிரானவன்” என்றார்.

ஜெய்சங்கர் பேசியது

ஜெய்சங்கர் பேசியது

இம்ரான் கான் தனது லாகூர் பேரணியில் போட்டுக் காட்டிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேச்சு, கடந்த ஜூன் 3ம் தேதி பேசியது ஆகும். ஸ்லோவேகியா நாட்டில் GlobSec 2022 என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ஜெய்சங்கரிடம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் அந்நாடு போரில் செலவு செய்ய உதவும் என்கிறீர்கள். இந்தியா மட்டும் தானா எண்ணெய் வாங்குகிறது. ஐரோப்பிய நாடுகள் கூட எரிவாயுவை ரஷ்யாவிடம் இருந்துதான் வாங்குகிறது. ஐரோப்பிய நாடுகள் கொஞ்சம் நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் பிறருக்கு வைக்கும் அளவுகோலை முதலில் உங்களுக்கு வைத்து பாருங்கள்” என்று பேசியிருந்தார்.

Previous Story

எகிப்து தேவாலயத்தில் தீ: 41 பேர் பலி

Next Story

இலங்கை நடிகை: இந்திய தொழிலதிபரை மிரட்டி 910 கோடி பறித்த விவகாரம்!