இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில்8360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை வைத்து உள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது தொடர்பாகஇ இலங்கை அதிபர்இ கோத்தபய ராஜபக்சேவுடன்இ பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம்இ தொலைபேசியில் பேசினார். அப்போதுஇ பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

ஊரடங்கால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை செய்வதாகஇ மோடி அப்போது உறுதி அளித்தார். இந்த பேச்சின் போதுஇ இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கரன்சி ஸ்வாப் எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ்இ 8360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் எனஇ கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இது குறித்துஇ இலங்கை உயரதிகாரிகள் கூறியதாவது சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம்இ 3040 கோடி ரூபாய் கடன் வழங்கும்படி இந்தியாவிடம்இ இலங்கை ஏற்கனவே கேட்டுள்ளது. தற்போதுஇ அதைத் தவிர கூடுதலாகஇ 8360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் எனஇ அவர் கேட்டுள்ளார்.

பொருளாதார சிக்கல்களால்இ நாட்டின் ரொக்க இருப்பு குறைந்து வருவதை சமாளிக்க இந்த உதவியை செய்யுமபடிஇ கோத்தபய கேட்டுள்ளார். இதைத் தவிரஇ இலங்கையில் நிறுத்தப்பட்ட துறைமுகப் பணிகளைஇ இந்தியா விரைவில் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும்இ அவர் முன்வைத்தார். இவ்வாறுஇ அவர்கள் கூறினர்.

3 Comments

  1. Was looking for a new bookie, and 811bet popped up. Decent odds, and they seem to cover most sports. If you’re shopping around, might be worth a peek. Info at 811bet.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

கொரோனா சாம்ராஜ்யம் புதுக்கதை!

Next Story

கொரோனா-வீட்டில் முடங்கினால் நோய் எதிர்ப்பு எப்படி!