இந்தியருக்கு ஹிந்தி தெரிந்திருக்கும்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், டிவிட்டரில் மீம்ஸ் போடுவதில் வல்லவர். சேவாக் அணியில் இல்லாத நேரத்தில் வாசிம் ஜாபர் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக இருந்து இரட்டை சதம் அடித்துள்ளார்.

கம்பீர், சேவாக் ஜோடி தங்களது இடத்தை உறுதி செய்த பிறகு வாசிம் ஜாபருக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது. காடுகளுக்குள் ஹோட்டல், இந்திய அணிக்காக தென்னாப்பிரிக்க செய்த பெரும் ஏற்பாடு. வைரலாகும் புகைப்படங்கள் மீம் கிரியேட்டர் எனினும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார் வாசிம் ஜாபர்.

 

இதன் பிறகு, டிவிட்டரில் குடியேறிய வாசிம் ஜாபர், இந்திய கிரிக்கெட் அணியை யார் விமர்சித்தாலும், அவ்ர்களக்கு டிவிட்டர் மூலம் பதிலடி தருவார். இந்திய அணியின் வெற்றியை மீம்ஸ் போட்டு கொண்டாடுவார். இதனால் ஒரு மீம் கிரியேட்டர் போலவே வாசிம் ஜாபர் மாறினார். ரசிக்க வைப்பேன் இந்த நிலையில், டிவிட்டரில் இன்று ஸ்பேஸ் மூலம் வாசிம் ஜாபர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய வாசிம் ஜாபர், ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக தான் மீம் போட்டு ரசிகர்களை குஷி படுத்துகிறேன். இனியும் தொடர்ந்து அந்த பணியை மேற்கொள்வேன் என்றார். ஹிந்தி அப்போது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வாசிம் ஜாபரிடம் ஆங்கிலத்தில் பேசவா, இல்லை ஹிந்தியில் தொடருவா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு வாசிம் ஜாபர் ஹிந்தியில் பேசுங்கள் என்று குறிப்பிட்டார்.மேலும் இந்தியர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும், இந்தியிலேயே அவர்கள் யோசித்து, புரிந்து கொள்வார்கள். இதனால் நானும் ஹிந்தி கற்று கொள்கிறேன் என்று தெரிவித்தார். சர்ச்சை இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஹிந்தியில் தொடரப்பட்டது.

வாசிம் ஜாபரின் இந்த பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜாபர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கிரிக்கெட்டிலும் இந்தியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் நான் தமிழில் தான் பேசுவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்து இருந்து நினைவுக்கூர்ந்தது.

Previous Story

கஞ்சா: 'போதையா  மூலிகையா' விவாதம்!

Next Story

தடுப்பூசிகள் ஒமிக்ரானை  எதிர்க்கும்?