இது நீதி அமைச்சர் ஆதங்கம்!

-நஜீப்-

இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனை மிகவும் ஆபாய கட்டத்தில் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு பெற்றோரும் அச்சத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில், நமது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்த சில கருத்துக்களை பார்கின்ற போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

சட்டம் நீதி என்பவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அவர் நமது நாட்டில் கைப்பற்றப்படுகின்ற போதைப் பொருட்கள் நீதி மன்றத்துக்கு வருகின்ற போது கோதுமை மாவாகி விடுகின்றது. கிலோ கணக்கில் கைப்பற்றப்படுகின்ற போதைப் பெருட்கள் மில்லி கிரேமாக குறைந்து போகின்றது.

அவரது இந்தக் கதைகளைப் பார்க்கின்ற போது பொலிஸ் மற்றும் நீதி மன்றங்களில் போதை வியாபாரிகளின் கையாட்கள் இருப்பது தெரிய வருகின்றது. அண்மையில் ஒரு நீதிபதி போதைப் பொருள் குற்றவாளிக்கு தண்டப் பணத்தை குறைவாக வழங்க லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு விசாரணையில்  உறுதியானதால் அவர் தற்போது  கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

நாட்டில் நீதி அமைச்சரே இப்படிப் பேசும் போது போதை வியாபாரிகள் எவ்வளவு செல்வாக்குடன் இருக்கின்றார்கள் என்பதனைப் பார்க்க முடிகின்றது.

நன்றி: 18.12.2023 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

கடலில் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகள்? தீயாய் பரவும் புகைப்படம்

Next Story

ஐஸ் போதைக்கு அடிமையான உயர் பதவி வகித்தவரின்  நிலை