இது கானல் கூட்டணியா?

நன்றி:

19.07.2026 ஞாயிறு தினக்குரல் 

நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனாலும் அநீதியை விடமாட்டோம்-ரிசாட்.! இது அரசுக்கோ எதிரணிக்கோ எதிரானதல்ல-ஹக்கீம்.! சிறுபான்மை கூட்டணி துவக்க நிகழ்வில் ஒலித்த வார்த்தைகள். பாம்புக்கும் நோகாமல் பாம்பை அடித்த தடிக்கும் நோகாத நழுவல் கதை இது!.

ரிசாட் கருத்துப்படி ராஜபக்ஸாக்கள் தயாசிரி விமல் கம்மன்பில போன்ற ஊழல் பேர்வழிகள் சட்டத்தை அமுல்படுத்தாதே என்று கேட்கின்றார்கள்.! ஈஸ்டர் குற்றஞ்சாட்பட்டவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று வீர வசனம் பேசுகின்றார்கள். அதில் இந்தக் கூட்டணி நிலைப்பாடு?

ஹக்கீமால் சஜித்தை பகைக்க முடியாது. நூலிழையில் நாடாளவர தோள் கொடுத்தவர். அரசும் வலுவாக இருக்கின்றது. பகைத்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல.! சஜித்துக்கு ஜனாதிபதிக் கனவு. அதனால் அவரும் இந்தக் கூட்டணியை கண்டுகொள்ள மாட்டார்.

தனித்துவத்தார்களுக்கு பொதுத் தேர்தலில் ஐமச.வில் சீட்டு வேணும். ஓகே! ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள முடிந்தால் பயணிக்கலாம். பட்சோந்தி நாடகம் என்றால் கூட்டணி சுவரில் எறிந்த பந்தாகும்.!

Previous Story

பைனலுக்கு தூக்கிய இளம் புயல்!

Next Story

හිටපු පොලිස්පතිගේ අභිරහස් මරණයේ ඇත්ත මෙන්න.පුතා හා ලේලිය හවුල්