இது உங்களுக்குத் தெரியுமா!

-நஜீப் –

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக இராணுவ அதிகாரி கேர்ணல் டப்லியு.எம்.ஆர்.வீஜேசுந்தர  வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார். அதற்கான வீடியோ ஒன்றையும் அவர் இப்போது வெளியிட்டும் இருக்கின்றார். உள்ளூராட்சி சபை உறுப்பினர் 8000ம் பேருக்கு எப்படி செலவு செய்வது என்றும் அவர் வேறு கேள்வி எழுப்பி வருகின்றார்.

ஐயா இந்த எண்ணிக்கையை அதிகரித்ததே  பெரியவர் ரணில் தானே. அப்போது மக்களுக்கு நல்ல சேவை வழங்க இந்த ஏற்பாடு என்றும் நமக்கு கதை சொன்னார் அவர். சரி உங்களுக்கு இந்தக் கதை தெரியுமா என்றும் நாம் கேட்கின்றோம்.

1970களில் நாட்டில் 7000ம் வரையிலான உறுப்பினர்கள் இந்த உள்ளூராட்சி சபைகளில் இருந்திருக்கின்றார்கள். அப்போது நாட்டில் குடித் தொகை 12388769 பேர். இன்று அந்த எண்ணிக்ககை 22400000 பேர்வரை.

1970 களில் இந்த சபைகளின் எண்ணிக்கை கூட இந்த அளவில் (341) இருக்கவில்லை. நொண்டிச் சாட்டுக்களை சொல்லி மக்கள் அடிப்படை உரிமைகளுக்கு ஆப்பு வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஆள் ரணில் நல்லாட்சி அரசில் நீர்வழங்கல் சபைக்குத் தலைவராக இருந்தவர் என்றும் தெரிய வருகின்றது

நன்றி: 12.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மொட்டு மரம் யானை புதிர் கூட்டு!

Next Story

 "பட்டம்" சட்டவிரோதமா..? பாயத் தயாராகிறது சட்டம்!