ஆழ் கடலில் ஓடும் தேசம்

-யூனுஸ் என் யூசுப்-

ஒரு காலத்தில் உலகில் மிகப் பெரிய கப்பலான டைடானிக் தனது முதலாவது பயணத்திலே ஆயிரக் கணக்கானவர்களுடன் கடலில் மூழ்கிப் போனது. இன்று அது பற்றி ஆய்வு செய்யப் போன ஒரு சிறிய ரக நீர்மூழ்கியும் அதே இடத்தில் மூழ்கிப் போனது.

அதில் பயணம் செய்தவர்களின் உடல்களும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என்று ஒரு செய்தி நமக்கு எட்டி இருக்கின்ற நேரம் நாம் புதியதோர் கதையை வாசகர்களுக்குச் சொல்ல நினைக்கின்றோம். என்னதான் ஆபத்துக்கள் அச்சுறுத்தல் இருந்தாலும் மனிதன் நவீன கண்டுபிடிப்புக்களை நிறுத்திக்கொள்ள தயாராக இல்லை.

Icon of the Seas | Preview Tour (2024) - YouTube

அந்த வகையில் பின்லாந்து தற்போது உலகில் மிகப் பெரிய கப்பலைக் கட்டி அதனை  பயிற்சிக்காக  அத்திலாந்திக் சமுத்திரத்தில் வெள்ளோட்டம் விட்டிருக்கின்றது. 2024 தை மாதம் அது தனது வர்த்தக ரீதியலான பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றது.

Icon of the Seas: the Icon of Vacations

அதன் நீளம் 385 மீற்றர்கள் அல்லது 1263 அடி. அதில் 5610 பயணிகளுக்கு இடவசதி இருக்கின்றது. கப்பலில் 2350 பணியாளர் வேலைக்கு அமர்த்தப்பட இருக்கின்றார்கள். ‘ஐகோன் ஒப்த சி’ என்ற இந்தக் கப்பல் இருபது மாடிகளைக் கொண்டது. இதனை ஆழ் கடலில் ஓடும் தேசம் என்று சொல்ல முடியும்.

நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பற்றி எரிகின்ற பிரான்ஸ்!

Next Story

உயிர்த்தெழும் உள்ளாட்சி சபைகள்!