ஆறுமுகன் தொண்டமான் !

பானு –

இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்இ அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். அவருக்கு வயது 55.கொழும்பிலுள்ள தனது வீட்டில் சுகயீனற்ற நிலையில்இ தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே காலமானதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.இந்தியாவுக்கான இலங்கை தூதர் கோபால் பாக்லேவை ஆறுமுகன் தொண்டமான் சந்தித்ததாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 26 மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.ஆறுமுகன் தொண்டமான் 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றிய அவர்இ 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றப் பிரவேசத்தை பெற்ற அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களின் வெற்றியீட்டியிருந்தார். பல அமைச்சு பதவிகளை வகித்த அவர்இ தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சு பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேறது!

Next Story

பாக்.கில் கொரோனா 58 ஆயிரம்