ஆப்:சாலையோரம் சமோசா விற்கும் டி.வி. ஆங்கர்

ஆப்கானில் வருமானமின்றி வேலையிழந்த அந்நாட்டு பிரபல டி.வி. நெறியாளர் தெருவோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 Viral: TV Anchor Sells Food On Street In Taliban-Ruled Afghanistan

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அடுத்து அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக பலர் வேலைவாய்பின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். முதியவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

கபீர் அக்மல் என்ற சமூக செயற்பாட்டாளர், தனது டுவிட்டரில் சில புகைபடங்களை வெளியிட்டார். அதில் இளைஞர் ஒருவர் தெருவோரம் அமர்ந்து சமோசா விற்பது போன்ற புகைபடங்கள் வெளியாகின. .

அதில் இவர்தான் மெளசா முகம்மாதி ஆப்கானிஸ்தானில் பல்வேறு டி.வி. சேனல்களில் நிருபராக, நெறியாளராக பணியாற்றிவர். பன்முக திறமை கொண்ட இவர் இப்போது வேலை வாய்பை இழந்து வருமானமின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தெருவோரம் சமோசா விற்கிறார் என குறிப்பிட்டார்.

இந்த புகைபடம் வைரலாக பரவியதையடுத்து, ஆப்கான் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் ஜெனரல் அகமதுதுல்லா வாஷிக், மெளசா முக்கமாதிக்கு பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Previous Story

ஒருநாள் போட்டி 498 ரன்:இங்கிலாந்து அணி உலக சாதனை!

Next Story

இலங்கைக்கு  அமெரிக்கா  கடன்