ஆப்கன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும்-ஜெய்ஷங்கர்

ஆப்கன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உறுதி அளித்துள்ளார். இன்று டில்லியில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உஸ்பெகிஸ்தான், கியார்கஸ்தான் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைநகர் டில்லி வந்துள்ளனர்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. இதனை அடுத்து அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.ஆப்கன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆட்சியை போலில்லாமல் ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமை தற்போது காலத்திற்கேற்ப சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.

ஆனாலும் ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அங்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக முதியவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.இதனை தடுக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா ஆப்கானிஸ்தானில் ஒருங்கிணைந்த கூட்டாட்சி மலரவும் ஆப்கன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார ரீதியாக உதவும் என்று உறுதி அளித்துள்ளார்.

Previous Story

சிமோன் பைல்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Next Story

பூஸ்டர் பெற்றுக் கொள்ளவும் -சந்திம ஜீவந்தர