ஆப்கன்: கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்களை கல் எறிந்து கொல்லலாம்.! 

ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் நிற்க வைத்து கல்லால் எறிந்து கொலை செய்யும் கொடூர தண்டனை மீண்டும் அமல்படுத்தப்படும் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கு முதலில் நியாபகம் வருவது தாலிபான்கள்.

நீண்டகாலமாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட நாடாக ஆப்கானிஸ்தான் இருந்தது. அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு தாலிபான்களை விரட்டியடித்தன. கடந்த 2021ல் அமெரிக்க படைகள் நாடு திரும்பின.  இதையடுத்து உள்நாட்டு போரை தொடங்கிய தாலிபான்கள் வெற்றியும் பெற்று ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றின. இந்த சமயத்தில் தாலிபான்களுக்கு பயந்து ஏராளமானவர்கள் வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

9 facts on women's rights in Afghanistan

குறிப்பாக பெண்கள் அகதிகளாக எல்லைகளை தாண்டி வேறு நாடுகளுக்கு சென்றனர். ஏனென்றால் தாலிபான்கள் மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். இதற்கு கடந்த 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் நடந்த தாலிபான்களின் ஆட்சியே சாட்சி. இத்தகைய சூழலில் தான் 2021ல் நாட்டை பிடித்த தாலிபான்கள் நாங்கள் திருந்திவிட்டோம்.

நாங்கள் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை எல்லாம் விதிக்க மாட்டோம் என கூறினர். ஆனால் தாலிபான்கள் வார்த்தைகள் எல்லாம் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்தன. ஏனெனறால் ஆட்சியை பிடித்த சில வாரங்களிலேயே பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டன. பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாது.

Taliban ban use of contraception: 'Conspiracy to control Muslim population' | World News - Hindustan Times

தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். போதைப்பொருள் சப்ளையே குஜராத் வழியாகத்தான்.. பாஜக ஆளும் மாநிலங்கள் ‘டாப்’.. மோடிக்கு ஸ்டாலின் பதிலடி! பூங்கா, ஜிம் செல்லக்கூடாது, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற கூடாது. வயது வந்த பெண்களுக்குபடிக்க தடை. சிறுமிகளாக இருந்தாலும் கூட சிறுவர்களுடன் சேர்ந்து கல்வி பயில தடை என கட்டுப்பாடுகள் வந்தன.

அதோடு இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும் என அறிவித்தனர். ஆப்கானிஸ்தானில் தற்போது பசி, பட்டினி அதிகரித்து இருந்தாலும் கூட தாலிபான்கள் அதனை பற்றி கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். மாறாக பெண்களின் சுதந்திரத்தை முற்றிலுமாக முடக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தற்போது தாலிபான்கள் போட்டுள்ள உத்தரவு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அதாவது ஆப்கனில் திருமணத்தை மீறிய உறவு (கள்ளக்காதல்), விபசாரம் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் நிற்க வைத்து பொதுமக்கள் கல்லால் எறிந்து கொலை செய்யலாம் என்ற கொடூர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த த்தரவை தாலிபான் உயர் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா பிறப்பித்தார். இதுதொடர்பாக அரசு தொலைக்காட்சியில் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா தோன்றி அறிவிப்பு வெளியிட்டார்.

அவர் கூறியதாவது: ‘சர்வதேச சமூகம் ஆப்கன் பெண்களின் உரிமைகள் பற்றி பேசி வருகின்றன. இது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது. பெண்களை கல்லால் அடித்து கொன்றால் அது பெண் உரிமைக்கு எதிரானது என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் விரைவில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்த போகிறோம். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களை நாங்கள் கல்லால் அடித்தும், கசையடி கொடுத்தும் கொல்லும் நடைமுறையை கொண்டு வர உள்ளோம்.

பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும். காபூலை (ஆப்கானிஸ்தான் தலைநகர்) கைப்பற்றியதோடு தாலிபான்களின் வேலை முடிந்து விடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு என்பது உலகநாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Previous Story

ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. கடைசியில் ஐநாவையே பதம் பார்த்த இஸ்ரேல்!

Next Story

வோட்டுக்கு ஒரு இலட்சம்!