ஆப்கனில் மேல் நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் படையெடுப்பு!

ஆப்கனில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 7 மாதங்களுக்கு பிறகு மாணவிகள் ஆர்வமாக பள்ளிகளுக்கு சென்றனர்.ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து உள்நாட்டு போர் துவங்கியது. 2021 ஆகஸ்டில் ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்தனர். புதிய தலைவராக முல்லா பாரதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதனால் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் ஆப்கன் அரசுக்கு தடை விதித்துள்ளன.\

இதற்கிடையே தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கனில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவிகள், ஆசிரியைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

12 வயது வரை அனுமதி

இதையடுத்து தாலிபான்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தினர். அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 7 ம் வகுப்ப வரை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மாணவ-மாணவிகள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 8 முதல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள வகுப்புகளுக்கு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில் பல்கலைக்கழகங்கள் திறந்தாலும் மாணவர்கள் மட்டுமே சென்றனர். பெரும்பாலானா பெண்கள் செல்லவில்லை.

மேல்நிலை பள்ளிகள் திறப்பு

இந்நிலையில் மார்ச் மாதம் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபான் அரசு அறிவித்தது. அதன்படி இன்று தலைநகர் காபூல் உள்ப பல்வேறு மகாணங்களில் மேல்நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் ஆர்வமாக சென்றனர். இதன்மூலம் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு மாணவிகள் சென்றுள்ளனர். இருப்பினும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி வகுப்புகள் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன

இதுகுறித்து ஆப்கனின் கல்வி அமைச்சக செய்தி தொடர்பாகளர் அஜிஸ் அகமது ராயன் கூறுகையில்,‛‛சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சி அடைய செய்யவே, உலக அரங்கில் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ பள்ளிகளை மீண்டும் திறக்கவில்லை. எங்கள் மாணவிகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்காகவே நாங்கள் இதை செய்கிறோம். பள்ளிகளில் 12 முதல் 19 வயது வரையிலான மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர்” என்றார்.

Previous Story

திலீபனின் இறுதி வார்த்தைகள்-விஜித ஹேரத்MP

Next Story

ஜி 20 லிருந்து ரஷ்யாவை வெளியேற்ற சொன்ன அமெரிக்கா! எதிர்த்து சீனா!!