ஆடிப் போய் கிடக்கும் அமெரிக்கா!

 ரஷ்யா கையில் பேரழிவு அரக்கன்!

புதினே இறந்தாலும்..

அதென்ன டெட் ஹேண்ட்?

Granlund cartoon: Controlling Trump

ரஷ்யா உக்ரைன் இடையேயான போரை நிறுத்த விளாடிமிர் புதின் முன் வராததால் அமெரிக்காவின் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா அருகே இருப்பதாக டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து ‘டெட் ஹேண்ட்’ என அழைக்கப்படும் அணு ஆயுத தாக்குதலுக்கான கட்டளை நடவடிக்கையை ரஷ்யா தயாராக வைத்துள்ளது. ‘டெட் ஹேண்ட்’ என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

அமெரிக்க அதிபராக தான் பதவியேற்றால் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் போரை நிறுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் துபாயில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முன் வைத்தது. அதனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டாலும் ரஷ்யா ஏற்கவில்லை

உக்ரைன் போர் தொடர்ந்து பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்படும் என ரஷ்யாவுக்கு அமெரிக்காவும், ஜி 7 நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Nicola Jennings on what's on the table for Trump and Putin – cartoon |  Nicola Jennings | The Guardian

ஆனால், அதற்குப் பிறகுதான் அமெரிக்கா உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக உக்ரைனும் ரஷ்யாவை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. டொனால்ட் டிரம்ப் இதனால் உக்ரைன் மீதான கோபம் அதிகரித்து அந்நாட்டின் மீதான தாக்குதலை ரஷ்ய இராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே போரை நிறுத்த 50 நாள் கெடு விதித்தார் அமெரிக்க அதிபர் ஆன ட்ரம்ப். பின்னர் அது வெறும் 12 நாட்களாக குறைக்கப்பட்டது. இது குறித்து பேசிய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலிங் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ், “ட்ரம்பின் ஒவ்வொரு காலகட்டமும் போரை நோக்கி தள்ளுவது போல் இருக்கிறது”என கூறியிருந்தார்.

டிமிட்ரி மெத்வதேவ் அவருக்கு பதிலடி கொடுத்த டொனால்ட் டிரம்ப், “டிமிட்ரி மெத்வதேவ் அத்துமீறி பேசுகிறார். ஏற்கனவே ரஷ்யாவின் அருகே இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிகளை நிலை நிறுத்த உத்தரவிட்டிருக்கிறேன்” எனக் கூறி இருந்தார்.

Cartoons: Donald Trump, Vladimir Putin and hacking

“அமெரிக்காவின் எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் டெட் ஹேண்ட் நடவடிக்கையை தூண்ட வழிவலுக்கும்.. அதன் பிறகு பின்வாங்க மாட்டோம். இது ஒரு அணு ஆயுத போருக்கான மிரட்டலாக கருதுகிறோம்” என டிமிட்ரி மெத்வதேவ் பதிலடி கொடுத்திருந்தார்.

டெட் ஹேண்ட் இதனைத் தொடர்ந்து டெட் ஹேண்ட் என்ற வார்த்தை உலக அளவில் பிரபலமாகி வருகிறது. டெட் ஹேண்ட் என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? எப்படி உருவானது என பலரும் தேடி வருகின்றனர்.

பனிப்போர் காலத்தில்அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே உலகையே நடுங்க வைத்த போட்டி நடைபெற்றது. அப்போது, ரஷ்யாவின் தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லாவிட்டாலும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அதிர்ச்சி தரும் அணு ஆயுத கட்டளை அமைப்பே ‘டெட் ஹேண்ட்’ ஆகும்.

பனிப்போர் காலம் சோவியத் யூனியன் 1980களில் உருவாக்கிய இந்த ‘டெட் ஹேண்ட்’ அமைப்பு, எதிரி நாடுகள் அணு தாக்குதல் நடத்தினால், அதன் விளைவான நில அதிர்வு, கதிர்வீச்சு போன்ற தகவல்களை உடனடியாக பதிவு செய்யும். சாதாரணமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் உத்தரவை நாட்டின் அதிபர் அல்லது ராணுவ தலைவர்கள் வழங்குவார்கள்.

ஆனால், எதிரி தாக்குதலில் அதிபர், ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டால், ‘டெட் ஹேண்ட்’ தானாகவே செயல்பட்டு, பதிலடி உத்தரவை வழங்கும். இதனால், எதிரி நாடு அழிவதைத் தவிர்க்க முடியாது.

அணு தாக்குதல் பதிலடி அதிபரின் உத்தரவு இல்லாமல் கூட, டெட் ஹேண்ட் அமைப்பு பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட அணுகுண்டுகளுக்கு நேரடியாக தகவல் அனுப்பும். பின் அவை தானாகவே செயல்பட்டு, தாக்குதல் நடத்திய நாட்டை குறிவைத்து அணு வெடிப்புகளை நிகழ்த்தும்.

சோவியத் யூனியன் 1991ல் கலைந்த பின்னும், இந்த மரண ஆயுத அமைப்பை ரஷ்யா முழுமையாக அகற்றவில்லை. மாறாக, அதை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து வைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக் கோள் கண்காணிப்பு முறைகளுடன் இணைத்து, வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உலக நாடுகள் சமீபத்தில் ரஷ்ய முன்னாள் அதிபர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் திமித்ரி மெட்‌வேதேவ், “டெட் ஹேண்ட் இன்னும் செயல்பாட்டில் உள்ளது” என்று வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், ரஷ்யாவின் அணு ஆயுத கொள்கைகள் குறித்து உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. உலகில் பல அணு ஆயுதங்கள் இருப்பினும், தலைவர்களின் உத்தரவின்றி தானாகவே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஆபத்தான அமைப்புகள் மிகக் குறைவு. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ‘டெட் ஹேண்ட்’ என்றே சொல்லலாம்.

Previous Story

ජනතාව නැවත ඉල්ලන්නෙ මන්ත්‍රී පස්සෙ යන යුගයද?

Next Story

புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய