ஐஎம்எப் சாடிக்குள் பூதமா!

நஜீப்-

ஐ.எம்.எப். உடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பகிரங்கமாக அறிவிக்குமாறு எதிரணியினர் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டாலும். அதனை ஆளும் தரப்பு மக்களுக்கு அறிவிக்க பின்வாங்கியது.

ஜனாதிபதி ரணிலே இந்த இரகசியங்களை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். எனவே அதில் பரம இரகசியங்கள் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யபட்டிருக்கின்றது.

இதில் தூய்மையான உடன்பாடு எட்டப்பட்டிருந்தால் இதனை மறைப்பதற்கு ஆளும் தரப்பு முனையாது! ஊழியர் மட்ட இணக்கப்பாடு என்பது ஒரு துவக்க நிலைத் தீர்மானங்களாகத் தான் இருக்க வேண்டும்.

இதனைக்குகூட அறிவிக்க முடியாது என்று சொல்லும் போது இறுதி நிலை இணக்கப்பாடுகளை இவர்கள் வெளியில் சொல்வார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐஎம்எப் முக்கியஸ்தர்கள் ஒரு முறை சொல்லி இருந்தார்கள்.

எனவே இலங்கை ஆட்சியாளர்கள்தான் மூடிமறைக்கின்றார்கள் என்றால் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று உபதேசம் பண்ணியவர்களாவது இதனை பகிரங்கப்படுத்துவதுதான் தார்மீகமாக இருக்கும்.

நன்றி:09.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தொலைந்த வேதாளம் வரவு!

Next Story

போதை மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் 'ட்ரீமெஷின்'