ஆசிரியர் – அதிபர் சம்பளம் வெளியானது சுற்றறிக்கை

ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரின் சம்பள முரண்பாட்டை நீக்கும் வகையில் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

பொது சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் ஜனவரி 3 ஆம் திகதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரின் சம்பள வித்தியாசத்தை நீக்கும் தீர்மானங்களுக்கு அமைய இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை தேசிய சம்பளம் மற்றும் ஊதிய ஆணையம் மற்றும் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதேவேளை, 2020 ஆம் ஆண்டில் பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

51,682 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஜனவரி 03 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்யாத பட்டதாரிகளுக்கு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

Previous Story

"உயிருடன் திரும்பியதாக முதல்வரிடம் சொல்லுங்கள்"

Next Story

ஓய்வு வயதெல்லை 65