ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு திப்பு சுல்தான் அச்சுறுத்தலாக இருந்தது ஏன்?

“மைசூரை ஆண்டுவந்த திப்பு சுல்தான், கிழக்கிந்திய கம்பெனியின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.”-பிரபல எழுத்தாளர் பி.ஷேக் அலியின் வார்த்தைகள் இவை. சில வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.வணிகத்தைப் பொறுத்தவரை, திப்பு சுல்தான் பிரிட்டிஷ் இந்தியா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் கவனம் செலுத்தினார்.

அது மட்டுமில்லாமல், வெளிநாட்டுப் பொருட்களைத் தடை செய்யவும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தவும் கோழிக்கோடு பௌஜ்தாருக்கு (படைத்தலைவர்) திப்பு சுல்தான் உத்தரவு பிறப்பித்தார்.

திப்பு சுல்தான்

சர்ஃபராஸ் அகமது

“ஆங்கிலேயரிடம் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று மக்களிடம் சொல்லுங்கள். அவர்களிடம் இருந்து எதையும் வாங்காதீர்கள். அவர்களிடம் இருந்து எதையும் வாங்கவில்லையென்றாலே ஆங்கிலேயர்களுக்கு இங்கு வேலை இருக்காது” என்று திப்பு சுல்தான் தனது உத்தரவில் எழுதினார்.

வேளாண் பொருட்களை விற்பனை செய்ய நிறுவனம்

தனது சமஸ்தானத்திற்குள் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்வதற்காக திப்பு சுல்தான் சொந்தமான நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இதேபோல், தற்போது கத்தார், பஹ்ரைன், ஈரான், ஈரான், துருக்கி என்று அழைக்கப்படும் நாடுகளின் அப்போதைய பகுதிகளில் மைசூர் அரசாங்கத்தின் வர்த்தக மையங்களையும் அவர் தொடங்கினார்.

மைசூர் சாம்ராஜ்யத்தில் உள்ள முகவர்கள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை சேகரித்து படகுகள் மூலம் அவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். தங்கள் விளை பொருட்கள் சர்வதேச சந்தைக்கு செல்வதால் அதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெற்றனர்.

திப்பு சுல்தான்

லால்பாக் வேளாண் ஆராய்ச்சி மையம்

பட்டு நகரமாக விளங்கிய மைசூர்

மைசூரில் வெளிநாட்டு பயிர்களை பயிரிடுவது குறித்த ஆராய்ச்சியும் தொடங்கப்பட்டது. இதற்காக, “லால்பாக்” என்ற வேளாண் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது. முதலில் அங்கு பயிர்கள் பயிரிடப்பட்டு பின்னர் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

திப்பு சுல்தான் பல்வேறு நாடுகளில் இருந்து பட்டுப் புழுக்களை வரவழைத்து மைசூரில் வளர்க்கத் தொடங்கினார். அதன் பிறகு அது பெரிய தொழிலாக மாறியது. இன்று மைசூர் பட்டு நகரமாக மாறியதற்கு அதுவே காரணம்.

திப்பு சுல்தான்

மைசூர் பட்டு

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சின்னப்பட்டினத்திலும் பாலஹள்ளியிலும் இரண்டு சர்க்கரை ஆலைகள் நிறுவப்பட்டன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

1803 வரை மைசூர் சர்க்கரைக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது.

மக்களை எப்படி வருவாயை ஈட்ட செய்வது என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார் என்றே தெரிகிறது. யாராவது வேலையில்லாமல் இருந்தால் அவர்களுக்கு நிதியுதவி மற்றும் வேலை வழங்கப்படும். விவசாயிகள் யாராவது விவசாயத்தை கைவிடுவது தெரிந்தால் உடனடியாக அவர்களை தொடர்புகொண்டு அவர்களுக்கு காளைகளை வழங்குவது, நிதியுதவி வழங்குவது போன்றவற்றை அவரது அரசாங்கம் மேற்கொண்டது.

மைசூர் சமஸ்தானத்தில் வங்கி ஒன்றை திப்பு சுல்தான் தொடங்கினார். இந்த வங்கி மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆடுகளை வழங்கினர்.

திப்பு சுல்தான்

தொழில்நுட்பத்தில் ஐரோப்பியர்களை அசர வைத்த திப்பு சுல்தான்

மைசூர் ராணுவத்தை நவீனப்படுத்துவதில் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும் முக்கிய பங்காற்றினர். பல்வேறு ஆயுதங்களை திப்பு சுல்தானே உருவாக்கினார்.

1787ல் மைசூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் திப்பு சுல்தானில் பிரதிநிதிகள் மூலம் ஃபிரான்ஸுக்கு அனுப்பப்பட்டன. தனது சமஸ்தானத்தில் 10 தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்கும்படியும் திப்பு சுல்தான் கூறியிருந்தார்.

“1786ல் பாண்டிச்சேரி (புதுச்சேரி) கவர்னர் திப்பு சுல்தானின் சமஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளைப் பார்வையிட்டுள்ளார். அவை ஐரோப்பிய துப்பாக்கிகளை விட சிறந்தவை என்றார். திப்பு சுல்தான் சமஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை 1788ல் பார்வையிட்ட பிரான்ஸ் மன்னரும் அதையே சொன்னார்” என்று இர்பான் ஹபீப் எழுதினார்.

திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டதாக இருந்தது. 100 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் அதற்கு முன்பு இருந்ததில்லை.

ராக்கெட்டுகளை சுட 200 வீரர்கள் இருந்தனர். அவர்கள் குஷுன் பிரிகேட் என்று அழைக்கப்பட்டனர். 100 மீட்டர் தூரம் சென்று வெடிக்கும் வகையில் ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. மைசூரைக் கைப்பற்றிய பிறகு ஆங்கிலேயர்களுக்கு 600 ராக்கெட் லாஞ்சர்களும் 700 ராக்கெட்டுகளும் கிடைத்ததாக டாக்டர் ஷிவ் கஜ்ராணி எழுதினார்.

திப்பு சுல்தான்

படை வீரர்களை நடத்திய விதம்

திப்பு சுல்தான் தனது படை வீரர்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளித்தார். அவரே பலமுறை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் சில கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

24 மே 1786 தேதியிட்ட கடிதத்தில், திப்பு தௌலத் கான் என்ற அதிகாரிக்கு சிறுநீரக பிரச்சனைக்கு மருந்து அனுப்பியதாக எழுதினார்.

1785 செப்டம்பர் 12 தேதியிட்ட கடிதத்தில், நாய் கடித்த கிஷன் ராவ் என்ற அதிகாரிக்கு சிகிச்சை அளித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திப்பு ஜாமியா அல் உமூர் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அதில் ஐரோப்பிய மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர்.

டிசம்பர் 28, 1786 தேதியிட்ட ஒரு கடிதத்தில் – “ஐரோப்பாவில் காற்றழுத்த மானிகளைப் (barometers) பற்றி ஒரு புத்தகம் வந்துள்ளது. காற்றழுத்தமானியில் உள்ள பாதரசம் வானிலையின் அடிப்படையில் நகரும். எனவே, நோயாளிகள் தங்களின் கையை வைத்தாலும் அது அசையும். ” அந்த புத்தகத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்து அனுப்புங்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு சில காற்றழுத்தமானிகளையும் கொண்டு வந்தார்.

இப்படியாக திப்பு சுல்தான் ஆட்சியில் இருந்த மைசூர் சாம்ராஜ்யம் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருந்தது. திப்பு சர்வதேச அரசியலை உன்னிப்பாக கவனித்து வந்தார். அவர்கள் ராணுவத்தை புதுப்பித்து வந்தனர். சர்வதேச வர்த்தகம் மூலம் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்தது. அதனால் மைசூர் சாம்ராஜ்யம் கிழக்கிந்திய கம்பெனியை விட ஒரு படி மேலே இருந்தது.

அதனால்தான் திப்பு சுல்தானின் மறைவுக்குப் பிறகு இந்தியாவை தங்களுடையது என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள்.

Previous Story

நுவரெலியா:அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வை பாதிப்பு

Next Story

மே தினம் சொல்லும் செய்திகள்