அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன்:  “வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்”

தலைமை

அக்குறனை றஹ்மானிய்யஹ் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கண்ணியத்திற்குறிய அஷ்ஷைக் ஸாதிக் அப்பாஸ் (றஹ்மானி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு கல்லூரி மாணவர் அல்ஹாபிழ் உஸாமா அஜ்வதின் கிராஅத்தோடு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஹகீமிய்யஹ் அரபுக்கல்லூரியின் நிர்வாக சபைத்தலைவர் அல்ஹாஜ் நியாஸ் கலந்து சிறப்பித்தார்.

தஸ்க்கர ஹக்கானிய்யஹ் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷைக் லபீர் ஹனீபஹ் (முர்ஸி) ஹஸ்ரத் கலந்து கொண்டார்கள்.

கண்டி- கடுகல புர்கானிய்யஹ் அரபுக் கல்லூரியின் உப அதிபர் அஷ்ஷைக் றாபி ஹனீபஹ் (புர்கானி) அவர்கள் நூல் விமர்சன உரையை நிகழ்த்தியதோடு நூலாசிரியர் அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.

ஹகீமிய்யஹ் மாணவர்களான சுக்ரி குழுவினரால் இனிய உணர்வூட்டும் இரண்டு  கீதங்கள் பாடி கலந்து கொண்டோரை மகிழ்விக்கப்பட்டதுடன் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் நியாஸ் அவர்களினால் வாழ்த்துரையும் நிகழ்த்தப்பட்டது.

சமாதானத் தூதுவர்

அத்துடன் அகில இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் நூலாசிரியரான அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) “சமாதானத் தூதுவர்” என்ற மகுடம் சூடி கௌரவிக்கப்பட்டதுடன் ஹகீமிய்யஹ் அரபுக்கல்லூரி உஸ்தாத்மார்களினால் நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்தப்பட்டார். இந்நிகழ்வில் பின்வருவோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அஷ்ஷைக் றிபாய் (றஹ்மானி), சிரேஷ்ட விரிவுரையாளர்- றஹ்மானிய்யஹ் அரபுக் கல்லூரி, அக்குறனை.

அஷ்ஷைக் உமர்தீன் (றஹ்மானி)- தலைவர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா- கண்டி மாவட்டக் கிளை.

அஷ்ஷைக் காரி அப்துல் லதீப் (றஹ்மானி), ஆசிரியர்- பிரிட்டிஷ் சர்வதேசப் பாடசாலை-ஜப்பான்.

அஷ்ஷைக் அப்துல் கப்பார் (தீனி), அதிபர்- றவாஹிய்யஹ் அரபுக் கல்லூரி, தெஹியங்க, கண்டி.

அஷ்ஷைக் ஸயீத் றமழான் (றஹ்மானி), பிரதம இமாம்- கடுகல ஜும்மஹ் மஸ்ஜித், கண்டி.

அஷ்ஷைக் ஹஸன் றியாஸ் (அப்பாஸி), அதிபர்- தாருல் ஆயிஷா மகளிர் அரபுக் கல்லூரி, கண்டி.

அல்ஹாஜ் நஜ்முடீன், உரிமையாளர்- ஒயாமா டிரேடிங் கம்பனி.

அல்ஹாஜ் அப்துல் றஷீத், செயலாளர்- நிர்வாக சபை, ஹகீமிய்யஹ் அரபுக் கல்லூரி.

அல்ஹாஜ் மஸூத், உரிமையாளர்- ரிகோர்ன் லெதர்.

கண்ணியத்திற்குறிய ஷைகுர் றஹ்மானிய்யஹ் ஜிப்ரி ஹஸ்ரத் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியாததையிட்டு அவர்கள் நூலுக்கு வழங்கிய ஆசியுரை நிகழ்வில் வாசிக்கப்பட்டது.

முதல் பிரதி நூலாசியரினால் அதிதிகளுக்கு வழங்கி வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் இந்நூல்  அல்கலம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாகும்.

நிகழ்ச்சிகளை கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷைக் பஸ்மிர் (ஹகீமி), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் முஸ்லிம் சேவை அறிவிப்பாளர் சகோதரர் றழீம் ஆகியோர் இணைந்து மிகவும் சிறப்பாக நெறியாழ்கை செய்தனர்.

கல்லூரியின் உப அதிபர் அஷ்ஷைக் அப்ஸல் (அஸ்ஹரி) அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன் றஹ்மானிய்யஹ் அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷைக் றிபாய் (றஹ்மானி) அவர்களினால் துஆ இறைஞ்சப்பட்டு கப்பாரதுல் மஜ்லிஸுடன் நிகழ்வுகள் இனிதே நிறைபெற்றது.

அத்துடன் நிகழ்ச்சிகள் முழுமையாக Zoom நிகழ்நிலை ஊடாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் இராப்போஷணம் வழங்கப்பட்டது.

-எம்.றமழான் மர்ஸூக் (றஹ்மானி),

றஹ்மானிய்யஹ் அ/க,

அக்குறனை.

 

Previous Story

"வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்"

Next Story

பஷில்  திடீர் சலுகைள்: நிபுணர்கள் கருத்து ?