அலி பொங்கோவும் அவுட்!!

-யூசுப் என் யூனுஸ்-

1

அலி பொங்கோவும் அவுட்!

Ali Bongo Net Worth: How Is He Worth?

அதிகம் அறியப்படாத ஒரு ஆபிரிக்க நாடுதான் மத்திய ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு முகம் கொடுத்து அமைந்திருக்கின்றது கபோன். இந்த நாடு பக்கத்தில் இருக்கின்ற ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போன்று பிரான்சின் குடியேற்ற நாடாக இருந்து, 1960 ஆகஸ்ட் 17ம் திகதி விடுதலை பெற்றுக் கொண்டது.

ஏனைய குடியேற்ற நாடுகளைப் போன்றே இந்த நாட்டை தனக்குப் பின்னர் ஆட்சி செய்வதற்காக பிரான்சிய ஆட்ச்சியாளர்கள் தமக்கு விசுவாசமானவர்களின் கரங்களில் ஒப்படைக்க ஏற்பாடுகளைச் செய்திருந்திருந்தனர். இதனால் அங்கு பொங்கோ குடும்பத்தினர் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக அந்த நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.

சீனீயர் ஒமர் பொங்கோ இறந்த பின்னர் அவரது மகன் அலி பொங்கோ புரட்சி நடக்கும் வரை ஆதிகாரத்தில் இருந்தார். தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்ப்படும் நேரம் பார்த்து இந்த தேர்தல் ஊழல் மோசடி மிக்கது இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இராணுவம் அலியைக் கைது செய்து வீட்டுக்காவில் வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றது.

இதற்கு முன்னரும் பக்கத்து நைகரிலும் இப்படித்தான் புரட்சி நடந்தது. இயற்கை வலம் மிக்க நமது நாட்டை பிரான்ஸ்; இதுவரை கொள்ளையடித்து வந்திருக்கின்றது. இதற்குப் பின்னரும் இதனை அனுமதிக்க முடியாது என்று அங்கு பரவலான கருத்து. அந்த நாட்டில் மக்கள் தெகை (25) இருபத்தி ஐந்து இலட்சம். பரப்பளவு 267667ச.கி.

2

ஜோகன்னஸ்பர்கில் தீ 75 பேர் பலி!

தென்னாபிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் பழைமையான ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டு 75 பேர் வரை பலியாகியும் 50 வரையிலானவர்கள் படுகாயம் அடைந்தும் இருக்கின்றார்கள். சில நிமிடங்களுக்குள்  தீ முழுக் கட்டத்திலும் பரவி இருக்கின்றது.

அதனால் மக்களுக்கு அவசரமாக அங்கிருந்து வெளியேறிக் கொள்ள முடியவில்லை. நகர மையத்தில் மார்சல் டவுன் பகுதியில் பராமாரிக்கப்படாத பழைய கட்டங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் பெரும்பாலும் பிர ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் அதிகம் வாழ்கின்ற பகுதியாகவும் ஏழ்மையான மக்கள் இருக்கின்ற இடமாகவும் இனம் காணப்பட்டுள்ளது.

எனவே இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் வடக்கில் இருந்து வந்து குடியேறிய மக்களாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகின்றது. இந்த செய்தியைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம் வரை தீ அணைப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கின்றவர்களைத் தேடும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரம் பல சடலங்கள் தெருவோறத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

3

ஜோ பைடனுக்கு மூளைப் பிசகல்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குத் தற்போது மூளை பிசகி விட்டது. இப்படிச் சொல்லி இருப்பவர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். அவரது செயல்பாடுகள் உலகத்தை மூன்றாம் உலகப் போரொன்றுக்கு அழைத்துச் செல்கின்ற ஏற்பாடாகத்தான் தெரிகின்றது. பைடன் நேர்மையற்றவர் அத்துடன் வடிகட்டிய முட்டாலும் கூட.

மேலும் அவர் திறமையில்லாத ஒரு நிருவாகி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரிசோனா மாகாணத்தில் அமெரிக்க-மெக்சிக்கோ எல்லைக் கதவுகள், வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு மழைநீர் வெளியேறுவதற்காக அதிகாரிகளினால் திறக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அமெரிக்க மக்களால் கடுமையாக விமர்சனத்து இலக்கானது.

வெள்ளத்துக்காக எல்லை திறக்கபட்ட போது பெரும் தொகையான சட்ட விரோத குடியேற்றவாசிகள் அந்தக் கதவுகள் வழியே அமெரிக்காவுக்குள் நுழைந்து விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இப்படியான காரணங்களினால்தான் ட்ரம்ப் கடும் வார்த்தைகளினால் பைடனைத் திட்டி வருகின்றார்.

ட்ரம்ப் அதிகாரத்தில் இருந்த போது அவரையும் வடிகட்டிய முட்டாள் என்று மக்கள் அழைத்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

4

பிள்ளைக்காக பெற்றாருக்கு சிறை!

நியாயமான காரணங்கள் இன்றித் தமது பிள்ளைகளை 20 நாள், அல்லது அதற்கு மேல் பாடசாலைக்கு அனுப்பாமல் இருந்தால் அந்தப் பெற்றோர் அல்லது அவர்களது பாதுகாவலர்கள் சிறைக்குப் போக வேண்டி வரும் என்று சவுதி அரசாங்கம் எச்சரித்திருக்கின்றது.

குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகின்ற கல்வியாண்டில் இந்தக் கட்டுப்பாட்டை அரசு அமுல்படுத்துகின்றது. அதன்படி ஒரு பிள்ளை நியாயமான காரணங்கள் இன்றி இந்த எண்ணிக்கையான நாட்கள் பாடசாலைக்கு வராவிட்டால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் விசாரிக்ப்பட்டு விசாரணையின் முடிவில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்வார்கள். முதலில் இது தொடர்பான விசாரணைகள் பாடசாலை மட்டத்திலும் பின்னர் கல்விக் காரியாலய மட்டத்திலும் நடைபெறும்.

வருகின்ற கல்வி ஆண்டில் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சவுதி கல்வி அமைச்சுத் தெரிவிக்கின்றது.

5

உலகத் தங்க இருப்பு!

ஒரு நாட்டில் இருக்கின்ற தங்கக் கையிருப்புத்தான் அந்த நாட்டின் பொருளாதாரத்தின் சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றது. இது பொருளாதார வல்லுநர்கள் கருத்து. அந்த வகையில் உலகில் அதிகம் தங்கம்  கையிருப்பில் வைத்திருக்கின்ற முதல் பத்து நாடுகள்.

  1. அமெரிக்கா -8133 டன். 2. ஜேர்மனி -3355 டன். 3. இத்தாலி -2452 டன். 4. பிரான்ஸ் -2437 டன். 5. ரஸ்யா -2326 டன். 6. சீனா -2068 டன். 7. சுவிட்சர்லாந்து -1040 டன். 8. ஜப்பான் -846 டன். 9. இந்தியா -795 டன். 10. நெதர்லாந்து -612 டன். என்ற அளவில் இது இருக்கின்றது. இலங்கை 6.7 டன்.-நன்றி: 03.09.2023 ஞாயிறு தினக்குரல்
Previous Story

இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்!  முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம்

Next Story

வாராந்த அரசியல் 03.09.2023