அர்ஷ NGO முகவரா!

நஜீப்

நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல்

சஜித் அணிக்குள் இப்போது கடுமையான முறுகல் நிலை. அர்சத டி சில்வா நடவடிக்கைகள் சஜித்துக்கு இசைவாக இருப்பதாகத் தெரியவில்லை. இது தவிர கட்சியில் இருக்கின்ற பல சிரேஸ்ட அரசியல்வாதிகள் வெளிக்கு சஜித்துடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மை அப்படி இல்லை.

இது ஆபதத்தான ஒரு நிலை. இப்போது சஜித் ஆதரவாலர்கள் சிலர் தமது விசுவாசத்தை பகிரங்கமாக காட்சிப்படுத்துவதற்காக அர்சத டி சில்வாவை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார்கள்.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி ஹொரன அமைப்பாளர் சரித்த அபேசிங்ஹ என்பவர் அர்சாவை ஒரு என்ஜிஒ முகவர். டொலருக்கு விலைபோகின்ற ஒரு ஆள் என்று திட்டித் தீர்த்திருக்கின்றார்.

இது அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் தூண்டுதலில்தான் இது நடக்கின்றதா என்று தெரியவில்லை. கூட இருந்து குழிபறிக்கின்ற கூட்டத்தை சஜித்  அறிந்துதான் வைத்திருக்கின்றாராம்.

Previous Story

உலகையே உலுக்கிய ரகசியங்கள்!

Next Story

කවුද මේ රනිල්⁣ අමාරුවෙ දාපු සරෝජා..