அரை நிர்வாணப் படமும் கொலையும்!

 -நஜீப்-

சம்பவத் திகதி 1981.10.26. இது நீண்ட ஒரு உளவு ரிப்போர்ட். கதையை நாம் சுருக்கமாக ஆதாரங்களுடன் இங்கு நிருவ வேண்டி இருக்கின்றது. ஒரு ஜனாதிபதி மனைவியின் அரை நிர்வாணப் படங்கள் தொடர்பான விவகாரம் இது.

கதை மேற்கத்திய நாடுகளில் நடந்தவை அல்ல. நம்ம நாட்டுக் கதைதான். விமல் எஸ் சுரேந்திர, இவர் திவயின பத்திரிகையில் பணியாற்றிய ஊடகவியலாளர். அப்போது  அவர் தங்கி இருந்தது. இலக்கம்,131 கொட்டாவப் பாதை-பொரல்ல. சொந்த இடம்   இலக்கம் 466.கோஹாகொட கடுகாஸ்தோட்டை.

இவர் பிரதமர் …………..? (பின்னர் ஜனாதிபதி)  புகைப்படப் பிடிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார். பயணங்களின் போது இவரையும்  …………..? பிரதமர் அழைத்துக் போவது வழக்கம். அப்படிப் போன இடங்களில் இவர்  பிரதமர் மனைவி அரை நிர்வணப் படங்கள் பலவற்றை எப்படியோ பிடித்திருக்கின்றார்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவர் இந்தப் படங்களை தான் பணிபுரிகின்ற பத்திரிகையில் பிரசுரிக்கவும் ஏற்பாடுகள் செய்திருக்கின்றார். இந்தக் கதை எப்படியோ அம்பலமானதால் சுரோந்திர அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். கொலையுடன் ஐதேக. அரசியல்வாதி  …….. !(2)  என்பவருக்கும் தொடர்பு.?

இது பற்றி கந்தான பொலிசில் பதிவுகள்  இருக்கின்றது. விசாரணையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி ஜலீல் மஹ்ரூப் பாரூக். கொலை செய்த பின்னர் சடலத்தை குறிப்பிட்ட (…….. !) அரசியல்வாதி ஆட்கள் வைத்தியசாலையிலிருந்து கடத்திச் செல்லவும் முயன்றிருக்கின்றார்கள்.

பின்னர் சுரோந்திர மூத்த சகோதரர் டப்லியு.எஸ். அபேரத்ன போராடி சடலத்தை கையேற்று கண்டிக்கு எடுத்துச் சென்று அங்கு 1981.10.31ல் அங்கு   அடக்கம் செய்திருக்கின்றார். பிற்காலத்தில் (1983.02.13) திவயின உரிமையாலர் உபாலி விஜேவர்தனவும் விமானத்தில் பறக்கும் போது காணாமல் போனார்.!

Previous Story

ரணில் ஆட்சி எப்போ முடியும் !

Next Story

சீனாவில் மக்கள் தொகை சரிவு.. மாணவர்களை காதலில் விழ வைக்க ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை.!