–நஜீப் பின் கபூர்–
நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல்
‘”தேர்தல்களில் இரவோடு இரவாக
அரசுகள் மாற்றமடைவதுண்டு.
அப்படி அரசுகள் மாறினாலும்
அதே வேகத்தில் நாட்டின்
பொருளாரதாரம் மாற்றமடைய மாட்டது.”
அனுர குமார தலைமையிலான என்பிபி. அரசாங்கத்தை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தார்கள். வெறும் மூன்று சதவீதம் என்று ஏலனமாக அழைக்கப்பட்ட என்பிபி. அதிரடியாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத்துவங்கினார். இது ஜனாதிபத் தேர்தலில் உறுதியாகி பொதுத் தேர்தலில் உச்சம் தொட்டது. அனுர தலைமையிலான என்பிபி. மக்களுக்குக் கொடுத்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான் அவர்களின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
எனவே வெற்றி பெற்ற அனுர தரப்பிடமிருந்து பொது மக்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தக் கேட்பது இயல்பானதே. எனவே அரச இயந்திரம் அல்லது வண்டி இப்போது சேற்றில் சிக்கிக் கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அவை அப்படி இருக்க அரசு முன்னெடுக்கின்ற பல திட்டங்கள் மற்றும் அரசி, தேங்காய், உப்பு என்பவை இன்று பேசு பொருளாகி இருக்கின்றன. இப்போது அவை பற்றிய எதிரும் புதிருமான செய்திகளைப் பார்ப்போம்.
கிளீன் ஸ்ரீலங்கா
குருடன் பார்த்த யானை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது நம்மவர்களுக்கு தெரியும். ஏதேனும் விபத்தினாலோ அல்லது இயல்பாகவோ ஒருவர் தனது பார்வைளை இழந்திருக்கலாம். எனவே அதற்காக அப்படிப்பட்ட மக்கள நோவிக்கின்ற நோக்கில் நாம் இந்த வார்த்தையை இங்கு பதியவில்லை என்பதும் நமது வசகர்களுக்குப் புரியும். தலைப்புப் பற்றிய எமது பதிவு அப்படி இருக்க, இந்த குருடன் பார்த்த யானை தொடர்பாக நாம் தற்போது பேசுவோம்.
பிறப்பிலே பார்வை இழந்த ஒரு மனிதன் யானையில் உடலில் எங்கெங்கு எல்லாம் தொட்டுப் பார்த்தானோ அதுதான் யானை தொடர்பான அவனது கற்பனையாக அல்லது ஊகமாக இருக்க வேண்டும். கால்களைத் தாடவிப்பார்த்தவனுக்கு அது உறலாகவும் காதைத் தொட்டுவனுக்கு சுழகாகவும் வளைத் தொட்டவனுக்கு தும்புத் தடி என்பது அவனது ஊகமாக இருக்கும். இதனால்தான் யானை பார்த்த குருடன் என்ற ஒரு வார்த்தை நமது சமூக வழக்கில் இன்றும் அழிந்து போகாமல் இருக்கின்றது.
இப்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் அரசாங்கம் முன்வைத்துள்ள கிளீன் ஸ்ரீ லங்காவுக்கும் இதற்கு என்ன உறவு என்று பார்ப்போம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட ஒரு வியடமாக இது பதில் இல்லாமல் இருந்தாலும் அனுர குமார இதனை முன்வைத்து நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஒரு தூய்மையை எதிர்பார்க்கின்றார்.
நமக்கு புரிகின்றபடி அனுர சிந்தனையில் இருக்கின்ற இந்த கிளீன் ஸ்ரீ லங்கா அவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட புரிதல் இல்லை. இதனைத்தான் நாம் யானை பார்த்த குருடன் கதைக்கு ஒப்பு நோக்குகின்றோம். இதனால்தன் அவர்கள் ஒவ்வொருவிதமாக இந்தக் கிளீனுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் மக்கள் மத்தியில் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் இருக்கின்ற தேவையற்ற உபகரணங்களை அகற்றுதல், பொலிஸாரின் கெடுபிடிகள், வீதியோரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றுதல் என்பனதான் கிளீன் லங்கா என்று இன்று எடுத்துக் கொள்ளப்பட்டடிருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி அனுர சிந்தனையில் மக்களுக்கு அனைத்து துறைகளிலும் தூய்மையான ஒரு நிருவாகத்தை கொடுப்பதும் மக்களின் சுமைகளைக் குறைப்பது-வீண் விரையங்கள் மற்றும் தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்தல் போன்றவை இதில் உள்ளடங்குகின்றன. ஆனால் நாம் மேற்சொன்ன விடயங்கள்தான் முச்சக்கரவண்டி மற்றும் வாகனங்களில் இருக்கின்ற அனவசியமா பெருட்களை அகற்றுவதுதான் கிளீன் ஸ்ரீ லங்கா என்று விமர்சனங்கள் வருகின்றன.
ஆனால் ஜனாதிபதி அனுர தருகின்ற தகவல்களின் படி காரியாலயங்கள் பாடசாலைகள் விளைநிலங்கள் நீதித்துறை பொலிஸ் வீதி ஒழுங்கு சுத்தமான காற்று உடல் சுகாதாரத்துக்கு ஏற்ற சுத்தமான உணவு என்று இன்னோரன்ன விடயங்கள் இந்த கிளீன் ஸ்ரீலங்காவுக்குள் வருகின்றது. இவை எவ்வளவு நல்ல ஒழுங்கு முறையாக இருந்தாலும் அவை பற்றிப் பேசாது இன்று கிளீன் ஸ்ரீலங்காவை விமர்சிக்கின்ற ஒரு ஒரு கூட்டம் நாட்டில் இருக்கின்றது. இது அனேகமாக அரசியல் மீள் எழுர்ச்சிக்கான முயற்சிகளாகத்தான் நாம் பார்க்கின்றோம்.
இந்த கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தில் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட இருப்பது பற்றிய ஒரு கருத்தை ஜனாதிபதி ஹோமகம கூட்டத்தில் பேசியதை நாம் பார்க்க முடிந்தது. அத்துடன் காரியாலயஙகளில் குப்பைகளாகக் குவிந்து கிடக்கின்ற பாவிக்கப்படாத தளபாடங்கள் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும். அதே போன்று அரச நிறுவனங்களில் பாவிக்கபடாத வாகனங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
வருடம் தோரும் வீதி விபத்துக்களினால் மரணிப்போர் 12000 ஆயிரம். நிரந்த பாதிப்புக்களுக்கு ஆளாகின்றவர்கள் 35000 பேர். காயம் அடைவோர் 43000 பேர். இதனைக் கட்டுப்படுத்துவது இந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் எதிர்பார்க்கப்படுக்கின்றது. ஒரு நாளைக்கு ஏழு எட்டாக இருந்த விபத்து மரணகள் இன்று மூன்று நான்கு என்று குறைவடைந்திருக்கின்றது. இது கிளீன் திட்டத்தில் மாற்றமாக ஜனாதிபதி சுட்டிக் காட்டுகின்றார்.
நாட்டில் அரசியல் பொலிஸ் பின்புலத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற போதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தலும் இதில் அடக்கம். அதே போன்று நாட்டில் காட்டு வளம் 25 சதவீதமாக இருக்க வேண்டும். ஜனாதிபதி கருத்துப்படி அது இன்று 16 வரைதான். நகர் புறங்களில் சுத்தமான காற்றுக்காக 10-25 ஏக்கர் காடுகளை உருவாக்குவதும் இந்த கிளீன் திட்டத்தில் உத்தேசம்.
அதன் மூலம் மக்களுக்கு சுத்தமான காற்று, மக்கள் தாம் உண்ணும் சுகாதாரத்துக்கு ஏற்றதாக இருக்க உணவுப் பரீசோனை, மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தலும் நம்பகமாக சுகாதரம் மருந்து, குவிந்து கிடக்கும் வழக்குகளும் மறைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் ஆவங்களையும் மீட்டெடுத்தல் என்பன ஜனாதிபதி சிந்தனையில் இருக்கின்றது.
அரசி தேங்காய் உப்பு!
தேர்தல்களில் இரவோடு இரவாக அரசுகள் மாற்றமடைவதுண்டு. அப்படி அரசுகள் மாறினாலும் அதே வேகத்தில் நாட்டின் பொளாரதாரம் மாற்றமடைய மாட்டது. இதுவும் ஜனாதிபதி அனுர கருத்துத்தான். வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட ஒரு தேசம் இரவோடு இரவாக பொருளாதர ரீதியில் பூத்துக் குழுங்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க முடியும்? அத்துடன் அவர்கள் முன்வைக்கின்ற விமர்சனங்களுக்கு இசைவாக கருத்துச் சொல்வோரும் அரசுக்கு எதிரான வஞ்சக உணர்வடன் தான் இருக்கின்றார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியது.
ஆனால் அரிசி விவகாரத்தில் சில அமைச்சர்கள் அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்கள் அனுர அரசுக்கு சிக்கல்களை உண்டு பண்ணி இருக்கின்றது. கிளீன் ஸ்ரீலங்கா விடயத்திலும் சிலரது கருத்துக்கள் அப்படித்தான் இருந்தது. அதே போன்று தேங்காய் தட்டுப்பாடு உப்புத்தட்டுப்பாடு பற்றியும் இன்று பேசப்படுகின்றது. தேங்காய் தட்டுப்பாட்டுக்கும் இந்த அரசுக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது. அதே போன்றுதான் உப்பு விவகாரமும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக உப்பு இறக்குமதி செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றது. கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைதான் இந்த உப்புத் தட்டுப்பாட்டுக்குக் காரணம்.
இந்த அரசு பதவி ஏற்று இன்னும் நூறு நாட்கள் கூட ஆகாத நிலையில் இதனை அனுர அரசின் வரவில் வைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் வரப்பிரசாதங்ளை இல்லாமல் செய்வது தொடர்பான வாக்குறுதிகளிலும் அரசுக்கு நெருக்கடி.
படுகொலைகளும் நீதியும்
கடந்த காலங்களில் நாட்டில் நடந்த சர்ச்சைக்குரிய படுகொலைகள் கொள்ளைகள் தொடர்பான 11 வழக்குகள் தற்போது கிளரி எடுக்கப்பட்டு நம்பிக்கையுடன் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி கூறுகின்றார். நாம் முன்பு ஒரு முறை சொன்னது போல இந்த வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் நாட்டில் செல்வாக்கான அரசியல்வாதிகள். அந்த வழக்குகள் கிடப்பில் போடுவதற்கு அன்று அதிகாரமிக்க பதவிகளில் இருந்த நிருவாகிகள் நீதிபதிகள் சட்டத்துறையினர் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பின்னணியில் இருந்தார்கள்.
அனேகமாக அதற்கு அவர்களுக்கு சலுகைகளும் கிடைத்தன. அதே ஆட்கள் அனுரவின் கிளீன் ஸ்ரீலங்கா விவகாரத்தில் எந்தளவுக்கு நியாயமாக நடந்து கொள்ள முடியும் என்று கேட்க வேண்டி இருக்கின்றது. இன்று கூட பணத்துக்கு பிணம் வாய்திறக்கின்ற நிலைதான் நாட்டில். எனவே இந்த அதிகாரிகள் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் இதய சுத்தியுடன் இந்த விடயத்தில் நடந்து கொள்வார்கள் என்று நாம் எதிபார்க்கவில்லை.
இதனால் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பகமில்லாத நிலை விசலமடைய இடமிருக்கின்றது. எனவேதான் ஒட்டு மொத்த அரச வண்டியும் சேற்றில் சிக்கிக் கொண்டது போலவும் ஒரு விமர்சனம் நாட்டில் பரவலாக இருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேலண்டும்.
அதே நேரம் அனுர அரசு அதிகாரத்துக்கு வந்ததால் நாட்டு மக்களுக்கு நிறையவே சாதகமான நிலமைகளும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது என்பதனை குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி உட்பட அனைத்து ஆளும் தரப்பு அமைச்சர்கள் உறுப்பினர்கள் அதிகாரிகள் மிகவும் மிக எளிமையான ஒரு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். ராஜபக்ஸ காலத்துடன் ஒப்பு நோக்கின்ற போது இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இதனையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
வங்குரோத்துப் பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு டொலரை கட்டுப்படுத்துவது, அஸ்வெஸ்ம தெகை அதிகரிப்பு. வரியைக் கட்டுப்படுத்தியது, பாடசாலை உபகரணங்களுக்கு வரிய மாணவர்களுக்கு தலா 6000ரூபா. 76000 ரூபா மருந்தை 370 ரூபாவுக்கு விநியோகம். கடற்றொழிலாளர்களுக்கு உதவித் தொகை. மின்சாரக் கட்டணத்தை இருபது சதவீதத்தால் குறைத்தமை.
மூடிக்கிடந்த தொழிற்சாலைகளின் மீள் இயக்கம். இந்திய சீன விஜயத்தில் பல நண்மைகள். பங்குச் சந்தை விலை அதிகரிப்பு. உல்லாசப்பிரயாணத்துறையில் அபிவிருத்தி. நஸ்டத்தில் இயங்கிய மில்கோ நிறுவனம் இலாபத்தில் இயங்குகின்றமை. புதிய சாரதி பத்திரம். சட்டம் ஒழுங்கு நீதிதிதுறையில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றமை அனேகமான பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. என சுட்டிக்காட்ட முடியும்.
அராஜகம்
குறிப்பிட்ட ஒரு இராணுவ முகாமில் இருந்து 73 ஆயுதங்கள் ஒரே நாளில் காணாமல் போய் இருக்கின்றது. அதில் 35 திருப்பி கண்டு பிடிக்ப்பட்டுள்ளது. ஏனையவற்றுக்கு நடந்தது என்னவென்று தெரியாது. இந்த ஆயுதங்கள் எப்படி வெளியே போனது காணாமல் போன ஆயுதங்களின் கதை என்ன? இதனை தற்போதய அமைச்சரவைப் பேச்சாளர் சொன்ன கதை. அதே நேரம் அனுர ஆட்சி நாட்டில் இல்லை என்று வைத்துக் கொண்டால் இது பற்றி எவருக்காவது ஏதாவது தகவல்கள் வெளியில் கிடைத்திருக்குமா?
மேலும் முன்பு பாதுகாப்புப் படைகளில் இருந்து வெளியேறியவர்ள் ஓய்வு பெற்றவர்கள் தப்பியோடியே என்போர்தான் கணிசமான பாதாள உலக மற்றும் போதை வியாபாரத்தின் பின்னணியில் இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று படைகளில் சேவை செய்து கொண்டிருக்கின்ற போது கூலிக்கு மேற்சொன்ன நடவடிக்கைகள் மற்றும் கொலைகளைச் செய்கின்ற ஒரு கும்பல் படைத்தரப்புக்குள்ளும் காசுக்கா வேலை பார்ப்பது தெரிய வந்திருக்கின்றது. எனவே எவரும் இவர்களின் இலக்குகளுக்கு ஆளாகமுடியும். காசுக்காக துப்பாக்கிகளுடன் ஒரு கோஷ;டி நாட்டில் சுதந்திரமாக நடமாடி வருகின்றது. இவற்றை அரசு துப்பறவு செய்யக் கூடாதா?
சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்த தந்த ஒரு தகவளின் படி 337 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படு வேண்டிய இதய மற்றும் பலியல் பலயீனங்களுக்கான வில்லையை 76000 ரூபாய்களுக்கு விற்பனை செய்து வந்திருக்கின்றார்கள் என்றால் இதனை என்ன கொடுமை என்று சொல்வது. கடந்த ஆட்சியே தொடர்ந்து நீடித்தால் இவை எல்லாம் வெளியே வந்திருக்க முடியுமா? இவற்றின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதனையும் அரசு பகிரங்கமாக மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
விமர்சனம்
நாம் தலைப்பில் குறிப்பிட்டிருப்பது போல அரசு சேற்றில் சிக்கிக் கொண்டதா என்ற கேள்விக்கும் விமர்சனங்களுக்கும் நியாயமான காரணங்கள் சம்பவங்கள் இருந்தாலும் அறிவுபூர்வமாக சிந்திக்கின்ற ஒரு குடிமகனுக்கு களத்தில் என்ன நடக்கின்றது என்பது தெரியும். நாம் குற்றச்சாட்டவது போல தற்போது அரசுடன் இருக்கின்ற அதிகாரிகள் நீதித்துறை பொலிஸ் என்பவற்றில் இருக்கின்ற கணிசமான ஒரு தொகையினர் ஊழல் மோடியான ஆட்சியாளர்களுக்குத் துனையாக செயல்பட்டவர்கள். அத்துடன் இதில் பலர் பங்காளிகளாக இருந்தவர்களும் இதில் இலாபம் அடைந்தவர்களும் கூட.
நமது கருத்துப்படி தற்போது புதிய அரசு வருகையால் இவர்கள் பல வழிகளிலும் பதிக்கபட்டவர்கள்-நஸ்டவாளிகளாகி இருக்கின்றார்கள். அவர்களின் செயல்பாடுகள் காரணமாக அரசு சேற்றில் சிக்கிக் கொண்டதுபோல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தில் ஏற்படுத்துகின்றது.
அதே போன்று கடந்த காலங்களில் நாட்டில் அமைதி இன்மையை தோற்றுவித்த சில ஊடகங்களும் நல்லாட்சியை ஜீரணிக்கத் தயாராக இல்லை. அவர்ளது விமர்சனங்களும் அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கின்றன என்பது எமது கருத்து. எனவே குடிகள் மிகுந்த எச்சரிகையாக விமர்சனங்களை ஆராயவேண்டும்.