அரசுக்குள் வெடிப்பு

-நஜீப் பின் கபூர்-

தேர்தல் காலங்களில் கூட்டணிகள் தோன்றுவதும் பின்னர் அதிகாரப் பகிர்வுகள் மற்றும் பதவிகள் தொடர்பில் முரன்பாடுகள் வருவதும் வளர்வதும் கூட்டணிகள் பிளவுபடுவதும் அதனால் அரசுகள் கவிழ்வதும் பல நாடுகளில் நடந்திருக்கின்றது. ஏன் நமது வரலாற்றிலும் எத்தனையோ முறை இது நடந்திருக்கின்றது. தற்போதும் நமது அரசியலில் இன்றும் இப்படியான ஒரு குழப்ப நிலை இருந்து வருகின்றது. என்றாலும் ஆளும் கூட்டணியில் இருக்கின்ற மொட்டு அணி பலமான நிலையில் இருக்கின்றது என்பதுதான் எமது கருத்து. எனவே தனது பதவிக் காலம் முழுவதும் அவர்கள் அரசாங்கத்தை எப்படியாவது ஓட்டிக் கொண்டு செல்வார்கள். ஆனால் மக்கள் வரலாற்றில் என்றும் இல்லாத தும்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்க வேண்டி வரும் என்பதும் கண்கூடு.

ஆளும் கூட்டணியில் இருஐந்து கட்சிகள் வெளியேற முனைகின்ற நிலையில் சஜித் அணியில் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்ற பலர் இன்று ஆளும் தரப்பு ஆதரவாக களத்தில் இருக்கின்றார்கள். முஸ்லிம்களின் தனித்துவக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று ஆளும் தரப்பு ஆதரவாக தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக அந்த உறுப்பிகர்களிடத்தில் விளக்கம் கோட்டால் தமது தனித்துவத் தலைவர்களின் சம்மதத்துடன் நாம் இப்படி நடந்து கொள்கின்றோம் என்பது அவர்களது விளக்கமாக இருந்து வருகின்றது.

எனவேதான் தனித்துவக் கட்சித் தலைவர்கள் இவர்கள் விடயத்தில் நொண்டிக் காரணங்களைச் சொல்லி இவர்கள் மீதான நடவடிக்கைகளுக்குப் பின்னடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது விநோதமான தண்டணைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தலைவர்களின் தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கில்லி விடும் விளையாட்டு. இது பற்றி நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கின்றோம். இது தொடர்பாக கட்சித் தலைவர்களிடத்தில் அந்தக் கட்சி ஆதரவாளர்கள் மீது கடும் அதிர்ப்தி நிலை ஏற்பட்டிருக்கின்றது.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த வருடம் திசம்பருக்குள் அரசு கவிழ்ந்து விடும் என்று கூறி இருக்கின்றார். நமது கருத்து அதற்கு மாற்றமாக இருக்கின்றது. அதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு. இதற்கு முக்கிய காரணம் ஆளும் தரப்புக் கூட்டணியில் இருக்கின்ற சிறு கட்சிகளில் பலர் அமைச்சு பிரதி அமைச்சுக்கள் போன்ற பதவிகளில் இருப்பதால் அவர்கள் இந்த அரசு அதிகாரத்தில் இருக்கும் கடைசி நிமிடம் வரை தொடர்ந்து அங்கு ஒட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது நமது உறுதியான நம்பிக்கை. எனவேதான் அவர்களில் சிலர் இப்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தக் கூடாது என்று அரசுக்கு அறிவுரை சொல்லிக் கொண்ருக்கின்றார்கள். இதற்கு காரணம் இந்த அரசை எப்படியாவது அதன் பதவிக் காலம் முழுவதும் பாதுகாத்து அதன் மூலம் தாமும் தனிப்பட்ட நலன்களை அனுபவித்துக் கொள்வதுதான்இவர்களின் உள் நோக்கம்.

அரசு அமெரிக்காவுடன்;; செய்து கொண்டிருக்கும் உடன்பாட்டை இரத்துச் செய்யும் விவகாரத்தில் தாம் இதனைக் கடுமையாக எதிர்ப்பது போல காட்டிக் கொள்கின்றார்கள். சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறான விடயங்கள் பற்றி இவர்கள் ஜனாதிபதி ஜீ.ஆரை. சந்தித்துப் பேச எழுத்து மூலம் வாய்ப்புக் கேட்ட போது. இது பற்றி பேச வேண்டியது தன்னுடன் அல்ல தனது சகோதரர்களான பிரதமர் எம்.ஆர். மற்றும் நிதி அமைச்சர் பசிலுடன் என்று பந்தை அவர்கள் பக்கத்திற்கு வீசி இருக்கின்றார். இது அந்தக் கூட்டணிக் கட்சிக்காரர்களுக்குப் பெரும் தலை குனிவைக் கொடுத்திருக்கின்றது.

இதற்கு முன்னர் அரசுடன் இணைந்து செயலாற்ற முடியாதவர்கள் சுதந்திரமாக வெளியே போக முடியும் என்று பிரதமர் எம்.ஆர். சொல்லி இருந்ததும் தெரிந்ததே. ஆளும் கூட்டணியில் இருக்கின்ற தமது சாகாக்களை இவர்கள் கண்டு கொள்ளத் தயாராக இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. எனதோன் மைத்திரி தலைமையிலான சு.கட்சி இதன் பின்னர் மொட்டு அணியுடன் எந்தக் கூட்டும் கிடையாது என்று அறிவித்து இருக்கின்றார். வருகின்ற தேர்தலில் தனது அணி தனித்துக் களமிறங்க இருக்கின்றது என்று தற்போது சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆளும் தரப்பு கடுமையான மக்கள் எதிர்ப்புக்;கு இலக்காகி இருக்கின்ற இந்த நேரத்தில் அங்கிருந்து வெளியேறியேறினால் வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் நல்ல அறுவடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சு.கட்சியினர் கருதுகின்றார்கள். அப்படி அவர்கள் வெளியேறினால் ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய சிறு கட்சிகளும் அங்கிருந்து வெளிறே வாய்ப்புக்கள் இருக்கின்றன. என்றாலும் பலர் ஆளும் தரப்புடன் ஒட்டிக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன. இதன் பின்னர் அவர்கள் வெற்றிலைச் சின்னத்தில்தான் தேர்தல்களைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு முதுகெழும்பு இல்லை. அவர்கள் ஒரு போதும் இந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் என்று எமது நிலைப்பாட்டில் அவரும் கருத்துக் கூறி வருகின்றார். அவர்கள் அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் முயற்சியாகத் தான் தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு நாடகமாடி வருகின்றார்கள் என்று தெரிவிக்கின்றார் குமார் வெல்கம.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கும் போட்டியிட முடியும் என்று பிரதமர் எம்.ஆர். அறிவித்திருக்கின்றார். ஆனால் அவரது வயது உடல் நிலை அதற்கு இசைவாக இல்லை. எனவே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பசில்தான் ஆளும் தரப்பு வேட்பாளர் என்பது எமது வலுவான கருத்து. சொல்கின்ற படி மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வந்தாலும் நாம் முன்பு சொல்லி இருந்தது போல அவர்களால் சாதிக்க முடியாது என நாம் நம்புகின்றோம்.

இந்திய மற்றும் சர்வதேச அலுத்தங்கள் காரணமாக அரசு தேர்தலை நடாத்தினாலும் தமது வாக்கு வங்கியில் கடுமையான வீழ்ச்சி இருக்கின்றது என்பது ஆளும் தரப்பினர் அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள். ஆனால் மொட்டு அணியின் கோட்பாதர் பசில் கணக்கு இது விடயத்தில் வேறு விதமாக அமைந்து காணப்படுகின்றது. அவர் இப்போது இந்திய மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறiவை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்.

அதே நேரம் மாகாணசபைத் தேர்தல் நடந்தால் அதில் தமக்கு பின்னடைவு வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அதனைத் தனக்கு சரி செய்து கொள்ள முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கின்றது. இதானல்தான் மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் அவர் ஆர்வமாக இருக்கின்றார். இதன் மூலம் இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் நல்லறவை வளர்கலாம் என அவர் கருதுகின்றார். எதிரணியின் பலவீனத்தை அவர் அறிந்து வைத்திருப்பதால் ஜனாதிபதித் தேர்தல் களம் தனக்கு வாய்ப்பாக இருக்கலாம் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தேர்தல் வருமாக இருந்தால் அதற்குப் பெரும் தொகைப் பணம் தேவைப்படும். என்ற நிலையும் இருக்கின்றது. தற்போது இந்தியாவிடம் இலங்கை ஒரு தொகைப் பணத்தை கடனாக எதிர் பார்க்கின்றது. இந்தப் பணம் தேர்தலுக்காகவா என்று ஊடக அமைச்சர் டலஸ் அலகப் பெருமாவை கேட்டால் அதற்கும் இதற்கும் எந்த தொடர்புகளும் கிடையாது என்று அவர் பதில் தருகின்றார். ஆனால் இந்தியா கொடுக்கின்ற பணத்தை வேறு விடங்களுக்குப் பாவித்து தேர்தலுக்கான பணத்தை இன்னும் ஒரு இடத்தில் இருந்தும் நிறப்ப முடியும் என்பதும் தெரிந்ததே.

அரச கஜானாவுக்கு வரும் பணத்தை அரசு எப்படியும் கையாள முடியும் இது என்ன புதுக் கதையா? இந்த அரச கடந்த காலங்களில் எப்படி எல்லாம் சட்ட விரோதமாக பணத்தை கையாண்டு வந்திருக்கின்றது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். மாகாணசபைத் தேர்தல் நடாத்துவதற்கு ஒரு அறுநூறு கோடி வரை தேவைப்படலாம் என்று நாம் கருதுகின்றோம். எனவே இந்திய கொடுக்கின்ற பணம் வேறு தேவைகளுக்கு என்று சொன்னாலும் அது தேர்தல் செலவுகளுக்கான பணமாகவே இருக்க முடியும்.

எமக்கு வருகின்ற தகவல்களின் படி சஜித் அணியும் மைத்திரி அணி விட்டுக் கொடுப்புடன் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் ஒரு முயற்ச்சியும் கிடப்பில் இருக்கின்றது. சு.கட்சி தனித்துக் களம் இறங்கி மாகாண சபைகளில் அரசுக்கு எதிரihன வாக்குகளைக் பெற்று மாகாணசபைகளில் ஒரு தீர்மானிக்கின்ற சக்தியாக வரலாம் என்றும் எதிர் பார்க்கின்றது. இந்த இரு கருத்துக்களுமே இன்று அந்தக் கட்சி வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றது.

இதற்கிடையில் ஆளும் தரப்பு கூட்டணிக் கட்சிகளிடையே தற்போது அடிதடி நடந்து கொண்டிருக்கின்றது. கொத்மலை பிரதேச சபையில் கூட்டணிக் கட்சிகளிடையே குறிப்பாக மொட்டு-விமல் தரப்பு மோதலில் சிலர் இரத்தக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிகிகப் பட்டிருக்கின்றனர். இது பசில் விமல் மோதல் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

மாகாணசபைத் தேர்தல் விவகாரத்திலுள்ள நெருக்கடி என்னவென்றால் நல்லாட்சிக் காலத்தில் 2017 மாகாணசபைத் தேர்தலை ஐம்பதற்கு ஐம்பது என்ற வீதத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது. இப்போது அதற்கான எல்லை நிர்ணயம் செய்ய வேண்டி இருக்கின்றது. இந்த எல்லை நிர்ணயம் செய்கின்ற போது அதற்கு நிறையக் காலம் தேவைப்படும். அதில் நெருக்கடிகளுக்கு நிறைய இடமிருக்கின்றது.பழைய விகிதாசார முறைப்படி நடாத்துவதானால் நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தால் போதுமாதாக இருக்கின்றது.

பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் எமக்கு குறுகிய கால அவகாசம் போதும் என்று தேர்தல் திணைக்களமும் கூறுகின்றது. இதற்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் ஒரு பிரேரனை நிறைவேற்றினால் போதும் என்று சட்ட வல்லுணர்கள் கருத்துக் கூறி இருக்கின்றார்கள். ஆளும் தரப்புக்குள் உள்ள இழுபறி நிலையும் ராஜபக்ஸாக்கள் தீர்மானங்களுமே இப்போது முக்கியமானதாக இருந்து வருகின்றது. எப்படியும் அரசாங்கத்துக்கு இன்னும் தேர்தலைப் பின் போடுவதற்கான நியாயங்களை இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் சொல்வதற்கு எந்த காரணங்களும் இல்லை என்பதும் தெளிவான விடயம். தேர்தல் விடயத்தில் அரசு இருதலைக் கொல்லி எறும்பின் நிலையிலே இருந்து வருகின்றது.

நாட்டில் பெரும் பஞ்சம் வர இருக்கின்றது. அப்படி எல்லாம் வர விட மாட்டோம் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த கூறுகின்றார். அவர் கருத்தை ஒரு போதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அவர் சொன்ன பொய்களை மக்கள் நன்கு அறிந்து தான் வைத்திருக்கின்றார்கள். திசம்பரில் நாட்டில் பாரிய எரிபொருள் தட்டுபாடு வர இருக்கின்றது. இதனை இராஜாங்க அமைச்சர் கம்மன் பிலகூட தெரிவித்திருக்கின்றார். எனவே காலம் தாழ்த்தி தேர்தல் என்பது எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்வாகத்தான் இருக்கும். கடும் போக்கு பௌத்த தேரர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் தேர்தல் தேவையில்லை அந்தப் பணத்தை மக்கள் நல்வாழ்வுக்குப் பயன் படுத்துங்கள் என்று கோஷம் எழுப்பி வருகின்றார்கள்.

Previous Story

அழைப்பு

Next Story

வாராந்த அரசியல்