அரசுக்குள் நடப்பவை சண்டையா நாடகமா!

-நஜீப் பின் கபூர்-

கடந்த வாரம் அதிகாரப் பரவல் தொடர்பாக ஆளும் தரப்புக்குள் மோதல் ஒன்று ஏற்பட்டிருப்பது பற்றி தகவல்களை வழங்கி இருந்தோம். இந்த வாரம் அது தெருச்சண்டை என்ற அளவுக்குப் போய் நிற்க்கின்றது. அது பற்றி நமக்குக் கிடைத்திருக்கின்ற சில தகவல்களையும் ஏதிர் வரும் நாட்களில் நடக்க இருக்கின்ற சில செய்திகளையும் இன்று பார்க்கலாம் என்று எண்ணுகின்றோம். ஆளும் தரப்புக்குள் நடக்கின்ற இந்த மோதல்கள் தொடர்பாக ரணில்-ரஜபக்ஸ தலைவர்கள் மட்டத்தில் அச்சமும் ஒருவகைப் பயமும் இருக்கின்றது. இதில் யார் வெற்றி பெற்றாலும் யார் தோற்றுப் போனாலும் அரசுக்கும் தமக்கும் தனிப்பட்ட சேதாரம் என்பதனை இந்த இரு தலைவர்களும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அப்படியானால் இந்த மோதல்களும் சண்டைகளும் ஏன் துவங்கி இருக்கின்றது என்று பார்த்தால் இந்த இருதரப்பு அரசியல் இருப்புக்கான அடித்தளங்களும் செப்பனிடப்பட வேண்டிய இந்த நேரத்தில் இப்படி ஒரு போர் இயல்பானதும் தவிர்க்கவும் தடுக்கவும் முடியாதது என்பதனையும் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். தமக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதனை ரணிலும்-ராஜபக்ஸாக்களும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ரணில் ஜனாதிபதியாக பதவி ஏற்க்கின்ற போது ராஜபக்ஸாக்ளுடன் எற்ப்பட்ட இணக்கபாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கிடையில் இந்த அதிகாரப் பகிர்வு முயற்ச்சிகள் நடக்கின்றது. அதன் ஒர் அம்சமாகத்தான் ஆளுநர்கள் பதவி விலகல் புதியவர்கள் (வடக்கு சார்ள்ஸ் கிழக்கு செந்தில் வட மேற்கு யாப்பா) நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை ரணில் தரப்பு மேற்கொண்டது.Ranil Wickremasinghe refuses to step down, says Rajapaksa appointment ‘unconstitutional’

இதற்கு மொட்டுத் தரப்பிலுள்ள சிலர் குறிப்பாக பசில் தரப்பு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியது. ஆனால் மஹிந்த இந்த விவகாரத்தில் ரணில் கோரிக்கைகள் தொடர்ப்பில் மொன்போக்குடன் தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றார். அதனால்தான் மூன்று ஆளுநர்களை பதவியில் இருந்து தூக்கம் அளவுக்கு ஜனாதிபதி ரணில் கை மேலோங்கி இருக்கின்றது. இதற்கு மஹிந்த ராஜபக்ஸ பச்சைக் கொடி காட்டி இருக்கின்றார். ஜனாதிபதி ரணிலுக்கு நெருக்கமானவர்கள் இந்த ஆளுநர் விவகாரத்தில் தாம் கடும் போக்குடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியல் பற்றி வலியுறுத்தப்பட்டடிருக்கின்றது.

புதிதாக நியமனம் பெற்ற ஆளுநர்களில் எவரும் ஐதேக.வைச் சேர்ந்தவர்களாக இல்லை. காரணம் மஹிந்த ராஜபக்ஸாவுக்கு நெருக்கமான கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுக்களை வழக்கும் வரை இந்த ஐதேக. முக்கியஸ்தர்கள் எவருக்கும் பதவிகளை வழங்கக்கூடாது என்ற பிந்திய ஏற்ப்பாட்டின்படிதான் ரங்கோ, நவின், கமகே போன்றவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்வில்லை.

ஆளும் மொட்டுக் கட்சியில் இருக்கும் பலர் இன்று ஜனாதிபதி ரணிலுக்கு விசுவாசமான ஒரு குழுவாகவும் செயலாற்றிக் கொண்டு வருகின்றார்கள். இதில் ஐதேக.வைப் பொறுத்தவரையில் தமது தலைவர் நாட்டில் ஜனாதிபதியாக இருப்பதால், இந்த நேரத்தில் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு முயறச்சியை அவர்கள் செய்து வருகின்றார்கள். அவர்கள் பக்கத்தில் அது நியாயமானது. அதே நேரம் மொட்டுக் கட்சியில் இருக்கும் சிரேஸ்டமானவர்களைத் தள்ளிவைத்து விட்டு தற்போது அந்த கட்சியில் இருக்கும் சிலரை அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவிகளில் அமர்த்ப்பட்டிருப்பதால் அவர்கள் தமது அரசியல் இருப்பை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்காக இன்று ஜனாதிபதி ரணில் மேல் அளவு கடந்த விசுவாசத்துடன் நடந்து கொண்டு வருகின்றார்கள்.

Rough First Day for New Lanka PM Ranil Wickremesinghe as Most Parties Refuse to Join Govt

இதனால்; ஆளும் மொட்டுத் தரப்புக்குள் ரணில் விசுவாசிகள் ராஜபக்ஸ விசுவாசிகள் என்ற இரு அணிகளும் அதற்கு அப்பாலும் ஒரு அணியும் தற்போது பகிரங்கமாக செயலாற்றிக் கொண்டு வருகின்றது. நாம் என்னதான் தேர்தல்களைத் தள்ளிப் போட்டாலும் என்றாவது ஒருநாள் மக்கள் ஆணைக்கு அடிபணிந்து தேர்தiலுக்குப் போக வேண்டி வரும் என்பதனை ஆளும் தரப்பில் இருக்கின்ற ஐதேக.-மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

அதனால்தான் தமது கட்சிகளைப் பலப் படுத்தும் முயற்ச்சிகள் தற்போது யானை மற்றும் மொட்டுக் கட்சிக்குல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அதே நேரம் அமைச்சர் ஆளுநர் நியமனங்கள் விவகாரத்தில் ஆளும் தரப்பு தமக்குள் விட்டுக் கொடுக்காத இடத்தில்தான் இழுபறி நிலமைகள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகும் ஒரு கதை சந்திக்கு வந்தது. அப்படி மஹிந்த மீண்டும் பிரதமரானால் நாட்டில் வன்மறையும் வெடிக்கும் அமைதியின்மை வரும் என்ற ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது.

இது ரணில் விசுவாசிகளின் ஏற்பாடு என்று ஒரு கதை தற்போது மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இதனால் கடந்த வாரம் மஹிந்த பிரதமரானால் கொழும்பில் அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு கிளர்ச்சி என்ற கருத்துப்பட நகர்வுகள் முன்னெடுக்கபட்டன. இது உள்வீட்டு ஏற்பாடுகள் என்று இப்போது சொல்லப்படுகின்றது. கொழும்பில் அதிரடியாக இராணுவம் களத்தில் இறக்கபட்டது தொடர்பாக விளக்கம் தரும் போது இராணுவ தளபதி அவசரகால நிலமை ஒன்று நாட்டில் ஏற்பட்டால் சமாளிப்பதற்கான ஒத்திகை ஒன்றைத்தான் நாம் முன்னெடுத்தோம் அவ்வளவுதான் என்று விளக்கம் சொல்லி இருந்தார்.

Dinesh Gunawardena with Mahinda Rajapaksa

பொலிஸ் அமைச்சர் டிரான் அலஸ் அரசுக்கு எதிரான சதி ஒன்று தொடர்பான தகவல் கிடைத்ததால்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி வந்தது என்று சமாந்திரம் இல்லாத விளக்கங்கள் அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இது எவ்வளவுதூரம் நகைச்சுவையான செய்தி என்று அமைச்சரிடமும் படைத்தரப்பிடமும் கேட்க வேண்டி இருக்கின்றது. இதிலிருந்து மேற்சொன்ன இரு தரப்பினரும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது..

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1500 உணவுப் பொதிகள் ஓடர் செய்யப்பட்ட ஒரு தகவல்தான் இந்த சதி தொடர்பாக ஆளும் தரப்பின் நடவடிக்கைகளுக்கு அடிப்படை என்று ஒரு கதையும் இருக்கின்றது. ஆளும் மொட்டுக் கட்சி தற்போது தமது இருப்தைப் பலப்படுத்திக் கொள்வதானால் மஹிந்த ராஜபக்ஸாவுக்கு அதிகாரம் மிக்க ஒரு பதவி அவசியம் என்பததை உணரப்பட்டிருக்கின்றது. அதனால்தான் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவி பற்றிய கதை தீயாக பரவியது. மஹிந்த பிரதமராவதை ஆளும் தரப்பில் தற்போது அமைச்சர்களாக இருக்கின்ற பல நடுத்தர வயதுக்கார அரசியல்வாதிகள் விரும்பவில்லை.

அப்படி அவர் பிரதமரானால் தமக்கு இப்போது இருக்கின்ற முக்கியத்துவம் இல்லாது போவதுடன் சிரோஸ்ட மஹிந்த விசுவாசிகள் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதுதான் மொட்டுக் கட்சிக்குல் நடக்கின்ற இந்த முறுகலுக்குக் காரணம். இந்த ஆளுநர் விவகாரத்தில் ரணில் தரப்பு சில வெற்றிகளைப் பெற்று தமது கையாட்களை அல்லது புதியவர்களை நியமித்து தமது பலத்தை உறுதிப்படுத்தி இருந்தாலும் அடுத்து வருகின்ற அமைச்சர்கள் நியமனம் தொடர்பான நகர்வின் போது மீண்டும் மஹிந்த கை மேலோங்கி ஆளும் தரப்பில் ரணில் பலயீனப்படவும் நிறையவே இடமிருக்கின்றது.

ரணிலினதும் அவரது கையாட்களின் தடைகளை-சதிகளைத் தண்டி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமனம் பெறுகின்றார் என்று வந்தால் நிச்சயமாக ஆளும் தரப்புக்குள் துவங்கி இருக்கின்ற இந்த தெருச்சண்டை இன்னும் தீவிரமாகும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். அப்போது ராஜபக்ஸாக்களுக்கு ரணில் ஜனாதிபதியாகும் போது கொடுத்திருக்கின்ற இரகசிய உடன்பாடுகள் தகர்ந்து போகவும் நிறையவே வாய்ப்புக்களும் இருக்கின்றன. அந்நிலையில் நாடாளுமன்றத்ததை ரணில் கலைப்பதாக அச்சுருத்தல் விடுக்கவும் இடமிருக்கின்றது.

மொட்டுக் கட்சி செயலாளர் சாகல காரியவாசம் இன்னும் ஒரு ஆயிரம் வருடங்கள் போனாலும் மஹிந்த ராஜபக்ஸ போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவர் நாட்டில் பிறக்கமாட்டார் என்று சொன்ன கருத்துக்கு எதிர்மறையாக சமூக ஊடகங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் மஹிந்த பற்றிய யதார்த்தத்தை முன்வைத்திருக்கின்றன. இப்படியான ஒரு மோசமான தலைவர் இன்னும் 1000 வருடங்களுக்கு பிறக்க மாட்டான் என்பதாகத்தான்; அந்தச் செய்தியாக அமைந்திருந்தன.

File image of Mahinda Rajapaksa. (Image: Reuters)

ஆளும் மொட்டுக் கட்சியைப் பொறுத்தவரை வருகின்ற தேர்தலில் தமக்குக் கடுமையான பின்னடைவு என்று வந்தாலும் அதற்குப் பின்னர் வருகின்ற தேர்தலில் தமது அரசியல் இருப்புத் தொடர்பான ஒரு முன்னெடுப்புக்காக அவர்கள் மஹிந்தவை பிரதமராக்கி அதன்மூலம் அரசியல் அதிகாரத்தில் சில காய்நகர்த்தல்களை இப்போது செய்ய முனைவதைத்தான் இந்த பிரதமர் கதை இருக்கின்றது. ஆனால் ரணில், மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவதை ஜீரணித்துக் கொள்ள மாட்டார். அப்படி வந்தால் தனக்கு இருக்கின்ற பெயரளவிலான அதிகாரமும் இந்த மஹிந்த பிரதமர் பதவியால் இல்லாமல் ஆகிவிடும் என்று ரணில் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்.

எப்படித்தான் தேர்தல்களைத் தள்ளிப் போட்டாலும் அதனைச் சந்திக்க வேண்டி வருவது தவிர்க்க முடியாதது என்பதனை ஐதேகாவும் மொட்டுக் கட்சியினரும் உணர்வதனால்தான் இன்று அவர்கள் ஆதிக்கப் போட்டியை தெருச் சண்டை என்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள். ஆளும் தரப்புக்குள் நடக்கின்ற இந்த ஆதிக்கப் போட்டியை ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியினரும் தமக்குள் மட்டுப் படுத்திக் கொள்ளும் அளவுக்குத்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது நமது அவதானம். இந்தப் போராட்டங்களின் கடிவாலம் மஹிந்த கைகளில் இன்னும் இருப்பதால் தற்போதைக்கு இந்த தெருச்சண்டைகள் ஆபதத்தானதாக இல்லை என்றும் நமக்கு எண்ணத் தோன்றுகின்றது.

சொல்லப்படுவது போல சஜித் அணியில் இருந்து டசன் கணக்கானவர்கள் ஆளும்தரப்புக்கு வந்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்துகின்றார்கள் என்று வைத்துக் கொண்டால், அவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகளைக் கொடுக்க வேண்டி வரும் இதனை மொட்டுக் கட்சியில் உள்ளவர்கள் ஜீரணித்துக் கொள்ள மாட்டார்கள். அப்போதும் ஆளும் தரப்பில் பெரும் சலசலப்பும் அதிர்ப்தியின்மை நிலமைகளும் ஏற்படும் என்பது உறுதி. எனவே இந்த அரசை முன்னெடுப்பதில் ரணில் மற்றும் மஹிந்த இருவரும் புலிவாலைப் பிடித்த நிலையில்தான் தமது பயணத்தை தொடர வேண்டி இருக்கின்றது.Sri Lanka Podujana Peramuna rally in Kalutara Sri Lanka

நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது இனப்பிரச்சினைக்கு தீர்வு, புதிய அரசியல் யாப்பு, புதிய ஆளுநர் அமைச்சர்கள் நியமனம். மீண்டும்வைப் பிரதமராக்கி அவருக்கு ஒரு கௌரவமான பிரியாவிடையைக் கொடுக்க வேண்டும் என்று ஆளும் தரப்பினர் சிலர் முன்வைக்கின்ற கருத்துக்கள்,உள்ளூராட்சித்,மாகாணசபைத் ஜனாதிபதித் தேர்தல், மற்றும் பொதுத் தேர்தல் என்று இவர்கள் என்னதான் கதைகள் அளந்தாலும் இதில் ஏதுவுமே சாத்தியம் இல்லை.

நாட்டில் அவசரமாக எந்த தேர்தல்களும் நடக்க வாய்பே கிடையாது. கடைசி நிமிடம் வரை இவர்கள் தேர்தலுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். வன்முறையாகக் கூட இவர்கள் ஆட்சியைத் தொடர இடமிருக்கின்றது. 2048ல் தான் மீட்சி என்ற கதையின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். இதனை எதிரணியில் இருப்பவர்கள் தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர்கள் ரணிலுடன் ஒட்டிக் கொள்ள முண்டியடிக்கின்றார்கள்.

முடியுமான மட்டும் அனைத்து தேர்தல்களையும் தள்ளிப் போடுவதுதான் இந்த ஆட்சியாளர்களின் உள்நோக்கமாக இருக்கின்றது. எனவே இவர்கள் முன்பு பதவிக்கு வருவதற்கு முன்னர் கிரீஸ் பூதம் ஈஸ்டர் தாக்குதல் போன்ற எதாவது வன்முறைகள் மூலம் மீண்டும் மக்களின் கவனத்தை திசைதிருப்புக்கின்ற முயற்ச்சிகள்தான் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. சிறுவர்களைக் கடத்தும் கதைகளும் அதற்கான விளம்பரங்களும் இதனால்தான் நடக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுக்கின்றது.

நன்றி: 21.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..?

Next Story

மாடர்ன் லவ் சென்னை: - விமர்சனம்