நஜீப்
(நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்)
அதிகாரத்தில் இருக்கும் என்பிபி. அரசு தொடர்பில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் இல்லை.
அரசு மீதான எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் பெருபாலும் பலயீனமான எதிரணியில் இருந்துதான் வருகின்றன.
என்னதான் தேசம் ஐக்கியம் எனப்பேசினாலும் இனம் மதம் தனித்துவங்கள் அரசியல் சிந்தனைகளால் அழிந்து போகக்கூடியதொன்றல்ல.
எனவேதான் ரஸ்யா சீனா போன்ற கம்யூனிட் நாடுகளில்கூட கனிசமான முஸ்லிம்கள் இன்றும் அங்கும் தமது தனித்துவங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
கடந்த தேர்தல்களில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஆனால் ஆளும் தரப்பில் இருக்கும் பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்களின் செயல்பாடுகளில் அந்த சமூகத்தின் மத்தியில் இன்று திருப்தியற்ற ஒரு நிலை பரவலாகத் தெரிகின்றது.
இதற்கான நெறிப்படுத்தல்களை என்பிபி.தான் சரிசெய்ய வேண்டும். தமிழ் உறுப்பினர்களைப் பொறுத்தவரை குறிப்பாக மலையக என்பிபி. பிரதிநிதித்துவங்கள் சற்று ஆரோக்கிமான நிலையில் செயலாற்றுவதாக நாம் காண்கின்றேம்.