அரசியல்வாதிகளை நிராகரிக்கும் பிரச்சார முழக்கத்திற்கு மஹிந்த தேசப்பிரிய கடும் எதிர்ப்பு

225 அரசியல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும் என்ற பிரச்சார முழக்கத்தை தாம் எதிர்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தாம் போராட்டத்தை ஆதரித்தமை எப்படி என்பது அனைவருக்கும் தெரியும்.நான் சொந்தமாக ஒரு பதாகையை கூட வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் மே 9 அன்று அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கினர்.அவர்கள் என் வீட்டைத் தாக்கவும் வந்தனர்’ என்று தேசப்பிரிய கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளை நிராகரிக்கும் பிரச்சார முழக்கத்திற்கு மஹிந்த தேசப்பிரிய கடும் எதிர்ப்பு | Srilanka Protest Against Mahinda Deshapriya

போராட்டம் செய்வது எப்படி

அரசியல்வாதிகளை நிராகரிக்கும் பிரச்சார முழக்கத்திற்கு மஹிந்த தேசப்பிரிய கடும் எதிர்ப்பு | Srilanka Protest Against Mahinda Deshapriya

அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை கையேற்றமைக்காகவே தமது வீட்டையும் தாக்க முனைந்ததாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே இளைஞர்கள் ஆவேசத்துடன் போராடலாம்.எனினும் போராட்டத்துக்கு முன்னதாக போராட்டம் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Previous Story

இராஜதந்திர பலம் பலயீனம்!

Next Story

வசந்த முதலிகே நிலை!