அரசால் வாழ்கின்ற ஐதேக.!

-நஜீப்-

சில வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சி செயலகமான சிரிகொத்தவைப் பராமறிப்பதற்கு அந்தக் கட்சி பெரும் சிரமங்களை எதிர் நோக்கியது. அப்போதெல்லாம் யாரெல்லாம் அதற்கு பண உதவி செய்தார்களோ  பிற்காலத்தில் கட்சி அதிகாரத்துக்கு வந்த போது அதற்கு நன்றிக் கடனாக நியமன உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவிகளையும் ரணில் கொடுத்திருந்தார்.

அப்படி பதவி பெற்றதில் தயா கமகே, அனோம கமகே சோடிகள் முக்கியமானவர்கள். இது ஐதேக. கட்சியினர் மட்டுமல்ல வெளியில் உள்ளவர்களும் அறிந்த பகிரங்க தகவல். இப்போது ஐதேக. கட்சியில் பெரும்பாலானவர்கள் அதிகாரம் மிக்க பதவிகளைப் பெற்று பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தாம் நியமிக்கபட்டிருக்கின்ற துறைக்கு எந்த வகையிலும் தகுதி இல்லாத பலர் இப்போது பதவிகளின் அமர்ந்திருக்கின்றார்கள்.

இப்படி இன்னும் பலர் உத்தியோகபூர்வமற்ற வகையில் பணம் சம்பதிக்கும் பதவிகளில் அமர்த்தப் பட்டிருக்கின்றார்கள். இவர்களிடம் போய் காலில் விழுந்து காரியம் சாதிக்க வேண்டிய நிலை மொட்டுக் கட்சியினருக்கு ஏற்பட்டு இருப்பதால், அரசால் பிழைக்கும் இந்த ஐதேக.வினர் மீது ஒரு கோபமும் வைராக்கியமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

நாம் முன்சொன்ன சண்டையுடன் சமாதனத்துக்கும் இதற்கும் ஒரு முடிச்சுப்போட்டுப் பார்த்தாலும் பிழைக்காது. இதனால்தான் புத்தளத்தில் யானை ரங்கேக்கும் மொட்டு சந்தாவுக்கும் லடாய்.

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உகாண்டா: பள்ளியில் தாக்குதல் - மாணவர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு

Next Story

வாழ்வா சாவா தீர்மானிக்கவும் ரணில் அதிரடி