அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சி!

அரசாங்கத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் பொரளை பிரதேசத்தில் தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் இவ்வாறான ஓர் சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் ஒர் நாடகம் எனவும், பொலிஸார் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க முயற்சிக்கவில்லை எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். முனி என்ற பெயருடைய தமிழர் ஒருவரே இவ்வாறு கைக்குண்டை வைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபரின் அறையை சோதனையிட்டதன் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் வேறும் சந்தேக நபர்கள் இருக்கின்றார்கள் என எவரேனும் குற்றம் சுமத்தினால் அது அரசாங்கத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கிலானது என்றே கருத வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த குண்டை தாமே வைத்ததாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் தகவல்களை வழங்காது பொலிஸாரிடம் முதலில் தகவல் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் சூழ்ச்சியாகவே நாம் பார்க்கின்றோம் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Previous Story

சிறையில் அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­த அனு­மதி - நீதி­மன்றம்

Next Story

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை?